மொபைல் விற்பனையில் சாம்சங்கை வீழ்த்தியது மைக்ரோமேக்ஸ்

மொபைல் விற்பனையில் சாம்சங்கை வீழ்த்தியது மைக்ரோமேக்ஸ்
Updated on
2 min read

செல்போன் விற்பனையில் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனத் தயாரிப்புகளை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித் துள்ளது மைக்ரோமேக்ஸ். இந் நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்ததாகும். கேனல்சிஸ் நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் இந்த விவரம் வெளியாகியுள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் விற் பனைச் சந்தையில் 22 சதவீதத்தைப் பிடித்தது. சாம்சங்கின் விற்பனைச் சந்தை 20 சதவீதமாக சரிந்தது.

உள்நாட்டு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் இந்தியாவில் முதலிடத்தைப் பிடித்துள்ளதோடு உலக அளவில் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளது.

மைக்ரோமேக்ஸ் தயாரிப்புகள் ரூ. 9,000 முதல் ரூ. 12 ஆயிரம் வரையாகும் (150 டாலர் முதல் 200 டாலர்). இந்நிறுவனத்தின் கேன்வாஸ் நைட்ரோ, கேன்வாஸ் ஹியூ ஆகிய தயாரிப்புகள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன.

இந்தியாவிலிருந்து அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த நிறுவனங்ளில் முதலிடத்தில் மைக்ரோமேக்ஸும், அடுத்தடுத்த இடங்களை சாம்சங், கார்பன் மற்றும் லாவா நிறுவனங் களும் பிடித்துள்ளன.

டிசம்பர் காலாண்டில் 23 சதவீத போன்கள் ரூ. 6 ஆயிரம் மதிப்பிலானவை (100 டாலர்). 41 சதவீத ஸ்மார்ட்போன்கள் ரூ. 6 ஆயிரம் முதல் ரூ. 12 ஆயிரம் வரையிலானவை (100 டாலர் முதல் 200 டாலர் வரை) ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 2.16 கோடி ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

உள்நாட்டு சந்தையைப் பிடிப் பதில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் மிகச் சிறப்பாகச் செயலாற்றி யுள்ளதாக கேனல்சிஸ் நிறுவன கணிப்புகள் தெரிவிக்கின்றன. பிராந்திய மொழிகளுக்கேற்ப தனது மாடல்களுக்கு பெயர் சூட்டி மக்களைக் கவர்ந்ததாக கேனல்சிஸ் நிறுவன பகுப்பாளர் ருஷாப் தோஷி தெரிவித்தார்.

மற்றொரு உள்நாட்டு நிறுவனமான லாவா, தனது தயாரிப்புகளில் பேட்டரியின் திறனை மேம்படுத்தி இரண்டு மூன்று நாள்கள் வரை தாக்குப்பிடிக்கும் வகையில் தயாரித்துள்ளனர். இதுவும் இந்நிறு வனத் தயாரிப்பு விற்பனை அதி கரிப்புக்குக் காரணமாக அமைந் துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

செல்போன் விற்பனை அதிகரிப்புக்கு முக்கியக் காரணமே அவற்றின் விலை குறைவாக நிர்ணயிக்கப்படுவதுதான். இத் தகைய ஸ்மார்ட்போன்கள் நடுத்தர சம்பளதாரர்களை அதிகம் ஈர்ப் பதாக தோஷி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக சாம்சங் விற்பனை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்துள்ளது. மைக்ரோமேக்ஸ், லாவா, கார்பன் போன்ற உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்கள் படிப்படியாக தங் களது விற்பனையை அதிகரித்து வந்துள்ளன. அத்துடன் மோட்ட ரோலா மற்றும் ஜியோமி போன்ற பன்னாட்டு தயாரிப்புகளும் சாம் சங்கின் சந்தையை சிதைத்துள்ளது.

இந்தியாவில் மட்டுமின்றி சர்வ தேச அளவிலும் சாம்சங் நிறுவனம் சரிவைச் சந்தித்துள்ளது. ஆப்பிள் மற்றும் ஜியோமி தயாரிப்புகளுடன் போட்டியிட வேண்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங்கின் பங்கு சரிந்துள்ளது.

2014-ம் ஆண்டில் சர்வதேச அள வில் சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட் போன் விற்பனை சந்தையில் 24.5 சதவீத சந்தையைப் பிடித்திருந்தது. முந்தைய ஆண்டு (2013) இது 31.3 சதவீதமாகவும், 2012-ம் ஆண்டில் 30.3 சதவீதமாகவும் இருந்தது.

மூன்று ஆண்டுகளாக சரிந்து வந்த ஆப்பிள் தயாரிப்புகளின் விற்பனை கடந்த ஆண்டு அதிகரித் தது. பிரேசில், ரஷியா, இந்தியா. சீனாவில் இந்நிறுவனத் தயாரிப்பு கள் அதிக அளவில் விற்பனையானதால் சாம்சங் விற்பனையை எட்டும் விதமாக ஆப்பிள் ஐ-போன்கள் அதிகரித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in