ரயில்வே பட்ஜெட் எதிர்பார்ப்பு: சென்செக்ஸ் 61 புள்ளிகள் உயர்வு

ரயில்வே பட்ஜெட் எதிர்பார்ப்பு: சென்செக்ஸ் 61 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

தொடர்ந்து மூன்று நாட்களாக ஏற்றம் கண்டுவரும் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் நேரத்தில் 61 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. தற்போதைய நிலையில் சென்செக்ஸ் 29,069.13. புள்ளிகளாக உள்ளது. அதே போல, தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியும் 18.80 புள்ளிகள் உயர்ந்து 8,786.05 புள்ளிகளாக உள்ளது.

ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதன் மீது உள்ள எதிர்ப்பார்ப்பினால் அதிக அளவில் வெளிநாட்டுப் பங்குகளை வர்த்தகர்கள் வாங்குவதும் சில்லரை முதலீட்டாளர்கள் அதிக அளவில் இருப்பதனாலும் இந்த உயர்வு இருப்பதாக கருதப்படுகிறது

புதன்கிழமை (நேற்று) வர்த்தக நேர முடிவிலும் கட்டுமானம், எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீட்டை தவிர மற்ற அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்த நிலையில் முடிவடைந்தன.

பட்ஜெட்டில் குறிப்பிடும் வகையிலான மாற்றம் இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில், கடந்த ஒரு வாரமாக சந்தையில் ஏற்றமான நிலையிலேயே நீடிக்கிறது.

ரயில்வேத் துறைக்கு சம்பந்தப்பட்ட திதாகர் வேகான் மற்றும் பி.இ.எம்.எல். பங்குகள் ரூ.583.80 மற்றும் ரூ. 987.90 முறையே உயர்ந்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in