சென்செக்ஸ் 178 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் 178 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

இரண்டாவது வர்த்தக நாளாக தொடர்ந்து இந்தியப் பங்கு சந்தைகள் ஏற்றம் பெற்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 178 புள்ளிகள் ஏற்றம் கண்டு 28533 புள்ளிகளாக உள்ளது. தேசியப் பங்குச் சந்தையான நிப்டி 62 புள்ளிகள் உயர்ந்து 8627 புள்ளிகளில் நிலை கொண்டுள்ளது. சென்செக்ஸின் முக்கிய 30 பங்குகள் 178 புள்ளிகளை தாண்டி வர்த்தகம் ஆனது.

டெல்லி சட்டப்பேரவை முடிவு கள் பாஜகவுக்கு பாதகமாக இருந் தாலும், அரசின் பொருளாதார கொள்கைகளில் முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைப்பதாகவும், இந்த ஏற்றமான போக்கு பட்ஜெட் அறிவிப்புவரை தொடர வாய்ப்பிருப் பதாகவும் சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வங்கித்துறை சார்ந்த பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் ஏற்றத் தைக் கண்டன. வங்கித்துறை, எப்எம்சிஜி , உலோகம், மற்றும் ஹெல்த்கேர் துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தைச் சந்தித்தன. ஐடி துறை சார்ந்த சில குறிப்பிட்ட நிறுவன பங்குகள் ஏற்றமாக வர்த்தகம் ஆனது.

ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் பங்குகள் 6 சதவீதம் வரை ஏற்றம் கண்டது. நிலக்கரி சுரங்க ஏலம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்த நிறுவனத்துக்கு சாதகமாக அமைந்ததால் இதன் பங்குகள் விலை ஏற்றம் கண்டது. தவிர டாடா ஸ்டீல், ஸ்டெர்லைட், கோல் இந்தியா நிறுவனப் பங்குகளும் 2 சதவீதம் வரை ஏற்றம் கண்டுள்ளன.

நேற்றைய வர்த்தகத்தில் ஏற்றம் கண்ட பங்குகள் ஆக்ஸிஸ் வங்கி 2.87%, எல்அண்ட்டி 2.57%, மாருதி 2.10%, டாடா ஸ்டீல் 2.8%, ரிலையன்ஸ் 2.07%. விலை இறக்கம் கண்ட பங்குகள் ஓஎன்ஜிசி 2.63%, பிஹெச்இஎல் 2.41%, டாடா மோட்டார்ஸ் 0.9%, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 0.81%, சிப்லா 0.5%.

சர்வதேச பங்குச் சந்தைகளிலும் ஏற்ற இறக்கமான வர்த்தகச் சூழலே நிலவியது. கிரேக்க மந்த நிலை குறித்து ஐரோப்பிய நாடுகளில் நிதிஅமைச்சர்கள் கூட்டம் பிரெஸ்ஸெல்சில் நடைபெறுவது தீர்வை தரும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆசிய பங்குச் சந்தை ஷாங்காய் 0.5 சதவீதம் ஏற்றத்தை சந்தித்துள்ளது. ஹேங்சங்க் 0.9 சதவீதம் இறக்கத்தை கண்டது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.62.25 என்கிற விலையில் நிலை கொண்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in