

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி) தனது மூலதனத்தை அதிகரித்துக் கொள்வதற்காக ரூ. 1,000 கோடி திரட்ட உத்தேசித்துள்ளது.
இதற்காக உத்தரவாதம் அல்லாத, முற்றிலும் மாற்றுவதற்கு இயலாத கடன் பத்திரங்களை வெளியிட உள்ளது.
ஒரு கடன் பத்திரத்தின் முக மதிப்பு ரூ. 10 லட்சமாகும். இந்த கடன் பத்திரங்களுக்கு 10 சதவீத வட்டி ஆண்டுதோறும் அளிக்கப்படும். இந்த கடன் பத்திரங்கள் ஜனவரி 23-ம் தேதி தொடங்கப்பட்டாலும் பிப்ரவரி 4-ம் தேதி வரை இதில் முதலீடு செய்யலாம் என வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.