Published : 10 Feb 2015 12:03 PM
Last Updated : 10 Feb 2015 12:03 PM

இவரைத் தெரியுமா?: பராக் பரிக்

$ பி.பி.எப்.ஏ.எஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.

$ பாம்பே பல்கலைக்கழகத்தில் எம்.காம் பட்டமும், ஹார்வேர்ட் நிர்வாக கல்லூரியில் நிர்வாக பயிற்சியும் பெற்றவர்.

$ 1979-ம் ஆண்டு சப் புரோக்கராக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தார்.1983-ம் ஆண்டு பாம்பே பங்குச்சந்தையில் உறுப்பினரானார். 1996-ம் ஆண்டு பி.பி.எப்.ஏ.எஸ் Parag Parikh Financial Advisory Services நிறுவனத்தை ஆரம்பித்து பி.எம்.எஸ் (portfolio management services) செய்துவந்தார்.

$ குறைந்தபட்சம் ரூ.25 கொடுத்தால் கிடைக்கும் இந்த வசதியை 5 லட்ச ரூபாய் கொண்டு வருபவர்களுக்கும் செய்துகொடுத்தார்.

$ சில ஆண்டுகளுக்கு முன்பு பி.பி.எப்.ஏ.எஸ். மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தை ஆரம்பித்தார். பங்குச்சந்தை தொடர்பாக இரண்டு புத்தகங்களை எழுதி இருக்கிறார்.

$ உங்களுக்கு புரியாத தொழிலில் முதலீடு செய்யாதீர்கள் என்று சொல்லுபவர். டெக்னாலஜி பங்குகள் உயர்ந்த போது இவரது பல வாடிக்கையாளர்கள் விலகினார்கள். ஆனால் தனக்கு புரியாத பங்குகளில் முதலீடு செய்ய மாட்டார்.

$ நீங்கள் முதலீடு செய்வது பங்குகளில் அல்ல தொழிலில் என்று சொல்லுபவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x