

இரு சக்கர வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வங்க தேசத்தில் ஆலை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்நாட்டைச் சேர்ந்த நிதோல் நிலோய் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
வங்கதேசத்தில் இரு சக்கர வாகன ஆலையை அமைக்க இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளது. இதன்படி அடுத்த 5 ஆண்டுகளில் வங்கதேசத்தில் ரூ. 240 கோடியை முதலீடு செய்ய ஹீரோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.புதிய ஆலை 2015-16-ம் நிதி ஆண்டின் இறுதியில் உற்பத்தியைத் தொடங்கும். ஹீரோ நிறுவனம் இந்தியாவுக்கு வெளியே அமைக்கும் முதலாவது ஆலை இதுவாகும்.
புதிய ஆலையில் 55 சதவீத பங்குகள் ஹீரோ மோட்டோ கார்ப் வசம் இருக்கும். எஞ்சிய 45 சதவீத பங்குகள் வங்கதேச நிறுவனம் வசம் இருக்கும். இந்த ஆலை ஆண்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும்.