சரக்கு கட்டண உயர்வால் சிமென்ட், நிலக்கரி விலை உயர வாய்ப்பு

சரக்கு கட்டண உயர்வால் சிமென்ட், நிலக்கரி விலை உயர வாய்ப்பு
Updated on
1 min read

நேற்று ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு முக்கிய சரக்குகளை கையா ளுவதற்கான கட்டணத்தை 0.8 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தினார்.

இதில் சிமென்டுக்கு 2.3 சதவீதம், நிலக்கரிக்கு 6.3%, மண்ணெண் ணெய், எல்பிஜி மற்றும் இரும்பு உருக்கு ஆகியவற்றுக்கு 0.8 சதவீதமும், உரம், பருப்பு மற்றும் தானிய வகைகளுக்கு 10 சதவீத கட்டண உயர்வை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தார்.

சரக்கு கட்டண உயர்வால் நிலக்கரியை பயன்படுத்தும் அலுமினிய நிறுவனங்கள் பாதிக் கப்படும். அதேபோல சிமென்ட்டுக்கு சரக்கு கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் ரியால்டி துறை பாதிக் கப்படும்.

இது குறித்து முன்னணி சிமெண்ட் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறும் போது ஒரு பை-க்கு 7 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கட்டணம் உயரக்கூடும் என்று தெரிவித்தார்.

ஆனால் சுண்ணாம்பு கல், டாலமைட், மாங்கனீசுக்கு சரக்கு கட்டணம் 0.3 சதவீதம் குறைக் கப்பட்டிருக்கிறது. ஸ்பீடு டீசலுக்கு 1 சதவீதமும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in