

$ சீமென்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் இந்தப் பொறுப்பிலிருக்கிறார்.
$ ஜெர்மனியில் பிறந்த இவர் ரோஜென்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் நிர்வாகவியலில் பட்டம் பெற்றவர்.
$ சீமென்ஸ் நிறுவனத்தில் 1980-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இந்நிறுவனத்தின் மலேசிய கிளையில் பணியாற்றிய அனுபவமும் இவருக்குண்டு.
$ கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், இறக்குமதி சுமை இந்தியாவுக்குக் குறையும் என்றும் அதை கட்டமைப்புத் துறைகளில் பயன்படுத்தினால் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று கூறியுள்ளார்.
$ `மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு தங்கள் நாட்டின் `ஜெர்மன் டூல் அப்ரன்டிஸ்’ திட்டத்தின் கீழ் இந்திய பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
$ அலையன்ஸ் டெட்ச்லாண்ட் ஏஜி, டெய்ம்லர் ஏஜி, என் எக்ஸ்பி செமி கண்டக்டர் பி.வி. உள்ளிட்ட நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும் உள்ளார்.