

ரிலையன்ஸ் குழுமத்தில் எந்த ரெய்டும் நடக்கவில்லை என அனில் அம்பானி நேற்று தெரிவித்தார்.
ரிலையன்ஸ் குழும அலுவலகம் அல்லது குழும நிறுவனங்கள் எதிலும் காவல்துறை சோதனை அல்லது ரெய்டு எதுவும் நடத்தவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக ரிலையன்ஸ் குழும நிறுவனங்களில் சோதனை என்கிற செய்தி பரவியதால் அனில் அம்பானி இந்த விளக்கம் அளித்துள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள ரிலையன்ஸ் அலுவலகங்களில், எந்த பகுதியிலும் அவ்வாறு சோதனை நடைபெறவில்லை என்று குறிப்பிட்டார்.