Published : 25 Feb 2015 10:58 AM
Last Updated : 25 Feb 2015 10:58 AM

அர்விந்த் சக்சேனா - இவரைத் தெரியுமா?

$ ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர். 2014 பிப்ரவரியில் இருந்து இந்தப் பொறுப்பில் இருக்கிறார்.

$ ஆகஸ்ட் 2012 ல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு பொது மேலாளராக சேர்ந்தார். பயணிகள் வாகனப் பிரிவின் மேலாண்மை இயக்குநர் பதவி வகித்தவர். ஃபோக்ஸ்வேகன் இந்தியப் பிரிவு இயக்குநர் குழுவிலும் பணியாற்றினார்.

$ இதற்கு முன்பு ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப் பிரிவின் துணைத் தலைவர், முதன்மை துணைத் தலைவர், விற்பனைப் பிரிவின் இயக்குநர் என பல பதவிகளை வகித்தார்.

$ மாருதி உத்யோக் நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். 1980ல் எஸ்கார்ட்ஸ் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் பகுதி மேலாளராக பணிக்கு சேர்ந்ததிலிருந்து ஆட்டோமொபைல் வாழ்க்கை தொடங்கியது. அதற்கு முன்பு 7 மாதங்கள் ஜோஸ்ட் என்கிற இன்ஜினியரிங் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் இருந்தார்.

$ அகமதாபாத்தில் உள்ள மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் மெக்கானிக்கல் பொறியியல் பட்டமும், லக்னோ பல்கலைக் கழகத்தில் மேலாண்மை உயர் கல்வியும் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x