

ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் நாட்டின் நேரடி வரி வசூல் 11.38 சதவீதம் உயர்ந்து 5.78 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் நேரடி வரி வசூல் ரூ.5.19 லட்சம் கோடியாக இருந்தது. இந்த தகவலை நிதி அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.
2014-15-ம் ஆண்டில் நேரடி வரி மூலம் 7.36 லட்சம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு இலக்கு நிர் ணயம் செய்திருக்கிறது. இது கடந்த நிதி ஆண்டில் கிடைத்த தொகையைவிட 16% வளர்ச்சியா கும். இதே காலத்தில் நிறுவன வரி 11.04% உயர்ந்து ரூ.3.64 லட்சம் கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் இது ரூ.3.28 லட்சம் கோடியாக இருந்தது. தனிப்பட்ட வருமான வரி 11.32 சதவீதம் உயர்ந்து 2.07 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த வருடம் இதே காலத்தில் 1.86 லட்சம் கோடியாக இருந்தது.
பங்கு பரிவர்த்தனை வரி (எஸ்.டி.டி) 44.12 சதவீதம் உயர்ந்தது. பங்குச்சந்தையின் செயல்பாடுகள் நன்றாக இருந்ததால் இந்த வரி அதிகமாக கிடைத்தது. கடந்த 10 மாத காலத்தில் 5,556 கோடி ரூபாய் வந்திருக்கிறது. நடப்பு நிதி ஆண் டில் வரி மூலமாக 13.6 லட்சம் கோடி ரூபாயை திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது.