Published : 05 Feb 2015 11:17 AM
Last Updated : 05 Feb 2015 11:17 AM

பணவீக்கம் கவலை தருகிறது: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்

பணவீக்கம் இன்னும் கவலை தரும் நிலையில் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார். கொள்கை முடிவுகளை வெளியிட்டு ஒரு நாளுக்கு பிறகு பொருளாதார வல்லுநர்களுடன் நடந்த உரையாடலில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் பணவாட்ட சூழல் இருந்தால் கூட நாம் இன்னும் பணவீக்கம் நிலையிலே இருந்துகொண்டிருக்கிறோம். இருந்தாலும் தற்போதைய சூழல் சமாளிக்கக் கூடியதாகத்தான் இருக்கிறது என்றார்.

ரகுராம் ராஜன் 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவி ஏற்றார். இதுவரை 11 நிதிக்கொள்கை முடிவுகளை வெளியிட்டிருக் கிறார். தொடர்ந்து ஏழு முறை வட்டிவிகிதங்களில் மாற்றம் செய்யாமல் இருந்திருக்கிறார். அதற்காக இனி வருங்காலங்களில் தொடர்ந்து வட்டி குறைப்பு இருக்காது என்பதையும் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

பணவீக்க எண்கள் போதுமான அளவுக்கு இருந்ததன் காரணமாக ஜனவரி 15-ம் தேதி 0.25 சதவீதம் வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. ஆனால் டிசம்பர் மாத பணவீக்கம் சிறிது உயர்ந்து 5 சதவீதமாக இருந்தது.

இந்த சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி மெத்தனமாக இருக்கிறது நிதிக்கொள்கை முடிவுகளை சிலர் விமர்சிக்கிறார்கள். சில சமயங் களில் பொதுமக்களின் எண்ணமும் அப்படியே இருந்தது.

ரிசர்வ் வங்கிக்கு போதுமான தகவல் கிடைக்கும்போது, குறிப் பிட்ட காலத்துக்கு முன்பாக கூட நாங்கள் செயல்பட்டிருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள் கிறேன் என்றார்.

மானியங்களை ஒழுங்கு படுத்து வது, தேவையான நபர்களுக்கு மட்டும் மானியத்தை கொடுப்பது உள்ளிட்ட அரசாங்கத்தின் முடிவுகள் சிறப்பானது. இதன் மூலம் அரசாங்கத்தின் செலவுகள் குறையும். இந்த செலவுகள் வேறு எங்காவது உற்பத்தி பயன்படுத்த முடியும். பணவீக்க நிர்வாகத்தை பொறுத்த வரையில் சிறப்பான முடிவு என்றார்.

வளர்ச்சியை பற்றி பேசும் போது, ஜிடிபி கணக்கிடும் முறை மாற்றி அமைக்கப்பட்டாலும் ரிசர்வ் வங்கி பொருளாதாரத்தை பார்க்கும் விதம் மாறாது.

புதிய வரும் பிப்ரவரி 9-ம் தேதி வெளியிடப்போகும் புதிய ஜிடிபி விகிதத்தை ரிசர்வ் வங்கி எதிர்நோக்கி இருப்பதாகவும் அவர் கூறினார்.

ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் உர்ஜித் படேலும் வட்டி குறைப்பு செய்யாதது சரியான முடிவு என்று கூறினார்.

புதிய நிதிக்கொள்கை வடிவம், புதிய பணவீக்க இலக்கு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ரிசர்வ் வங்கி மத்திய அரசிடம் பேசி வருகிறது. இதில் ரிசர்வ் வங்கிக்கு புதிய பணவீக்க இலக்கு நிர்ணயம் செய்து, அந்த இலக்கை அடைய சுதந்திரம் வழங்கப்படும்.

மற்ற நாடுகளின் மத்திய வங்கிகள் வேலை வாய்ப்பு தகவல்கள் வெளியிடுகின்றன. அதுபோல ஏன் ரிசர்வ் வங்கி வெளியிடக்கூடாது என்று கேட்ட தற்கு, தற்போது கிடைக்கும் தகவல்களை வைத்து இதற் கான கொள்கைகளை உரு வாக்கி வருகிறோம். ஆனாலும் மற்ற இடங்களில் இருப்பது போல இங்கு தகவல்கள் இல்லை என்றார்.

அந்நிய நிறுவன முதலீட்டாளர் கள் குறித்து பேசும்போது, இந்தியா வில் முதலீடு செய்வதை வரவேற் கிறோம். ஆனால் இன்னும் சிறிதுகாலம் அதிகம் முதலீடு செய்யலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x