சேவை வரி, சுங்க வரியை உயர்த்த வேண்டாம்: மத்திய அரசுக்கு சிஐஐ வலியுறுத்தல்

சேவை வரி, சுங்க வரியை உயர்த்த வேண்டாம்: மத்திய அரசுக்கு சிஐஐ வலியுறுத்தல்
Updated on
2 min read

வரும் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில் வரி விதிப்பில் மாற்றம் செய்யக் கூடாது என்று இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

சேவை வரி, உற்பத்தி வரி மற்றும் சுங்க வரி விதிப்பில் மாற்றம் எதையும் செய்யக் கூடாது என்றும் அது கேட்டுக் கொண்டுள்ளது. அப்போதுதான் அரசின் முக்கிய திட்டமான `மேக் இன் இந்தியா’ திட்டத்தை செயல்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தற்போது சேவை வரி மற்றும் உற்பத்தி வரி 12 சதவீதமாக உள்ளது. சுங்க வரி 10 சதவீதமாக இருக்கிறது.

2015-16-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் `மேக் இன் இந்தியா’ திட்டத்தை ஊக்குவிக்க திட்டங்கள் வகுக்க வேண்டுமெனில் பட்ஜெட் அறிவிப்பில் கூடுதல் வரி விதிக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளது.

நீண்ட காலமாக அமல்படுத்தப் படாமலிருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை (ஜிஎஸ்டி) விரைவாக அமல்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் மறைமுகமாக விதிக்கப் படும் சேவை வரி மற்றும் பொருள் கள் மீதான வரி விதிப்பு நியாய மான வருவாய் தரக்கூடியதாக (ஆர்என்ஆர்) இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஐஐ இயக்குநர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி குறிப்பிட்டார்.

உற்பத்தித் துறையை ஊக்குவிக்க ஆட்டோமொபைல், முதன்மை பொருள், நுகர்வோர் பொருள் உள்ளிட்டவற்றுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வரிச் சலுகை அளிக்கப்பட்டது. இந்த சலுகை கடந்த டிசம்பருடன் முடிவடைந்ததையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும் பொருள்களுக்கான கிராக்கி குறைந்துள்ளது. இத் தகைய சூழலில் வரிச் சலுகை தேவை என்றாலும், அரசின் நிதிப் பற்றாக்குறையைக் கருத்தில் கொள்ளும்போது இதை வலி யுறுத்த முடியாத சூழல் நிலவுவ தாக அவர் சொன்னார்.

இருப்பினும் ஆட்டோ மொபைல் உதிரி பாகங்களுக்கு விதிக்கப்படும் உற்பத்தி வரி விதிப்பில் நிலவும் சீரற்ற நிலைமையைப் போக்க வேண்டும் என்றும் சிஐஐ வலியுறுத்தியுள்ளது.

இருப்பினும் மருந்து தயா ரிக்கும் மூலப் பொருள், நிலக்கரி சாம்பலிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்கள், உணவு பதப்படுத்தல் துறையில் பயன்படுத்தப்படும் பேக்கிங் பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்கலாம் எனவும் வலியுறுத்தியுள்ளது. சுங்க வரி யைப் பொறுத்தமட்டில் இப் போது நிலவும் 10 சதவீத வரியை எப்போதும் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

சுங்கவரியைக் குறைத்தால் மேக் இன் இந்தியா என்ற கொள் கைக்கே முரணாக அமைந்துவிடும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

அதேசமயம் தாராள வர்த்தக ஒப்பந்தம் போடும்போது மலேசியா, தாய்லாந்து, ஆசியான் நாடுகளிலிருந்து அதிக அளவிலான பொருள்கள் இந்தியாவில் இறக்குமதியாவதற்கான வாய்ப்பு உள்ளது.

இங்கிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் ஏற்கெனவே வரிச் சலுகை பெற்று வருகின்றன. இவை முற்றிலுமாக நீக்கப்படும்போது உள்ளூர் பொருள்களை பாதிக்கும் என்றும் சிஐஐ சுட்டிக் காட்டியுள்ளது.

சில குறிப்பிட்ட உலோகக் கழிவுகளுக்கு சிறப்பு கூடுதல் சுங்க வரி 4 சதவீதம் விதிக்கப்படுகிறது. இதை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி), சமையல் நிலக்கரி உள்ளிட்டவற்றுக்கு வரி விலக்கு அளிக்கலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in