

ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் முழுமையாக கைமாறியது. கலாநிதி மாறன் வசம் இருக்கும் 58.46 சதவீத பங்குகள் முழுவதும் அஜய்சிங் வசம் மாறியது.
பிப்ரவரி 23-ம் தேதி கலாநிதி மாறன் வசம் இருந்த பங்குகள் முழுமையாக மாறியது. கடந்த ஜனவரி மாதம் இந்த மாறுதலுக்கு இயக்குநர் குழுமம் ஒப்புதல் அளித்தது.
அதன்பிறகு உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெயரில் அஜய் சிங் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்த இணைப்புக்கு சிசிஐ-யும் ஒப்புதல் வழங்கியது. மார்ச் மாத இறுதியில் 500 கோடி ரூபாயும், ஏப்ரல் மாத இறுதியில் 500 கோடி ரூபாயும் முதலீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
பிப்ரவரி 23-ம் தேதி 100 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது என்றும் 400 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று அஜய் சிங் தெரிவித்தார்