சூரிய, காற்றாலை மின் உற்பத்தி: வெல்ஸ்பன் திட்டம்

சூரிய, காற்றாலை மின் உற்பத்தி: வெல்ஸ்பன் திட்டம்
Updated on
1 min read

மரபு சாரா எரிசக்தித் திட்டங் களைச் செயல்படுத்தும் வெல்ஸ்பன் நிறுவனம் குஜராத் மாநிலம் மற்றும் ஆந்திரத்தில் இரண்டு மின் உற்பத்தித் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது.

புதுப்பிக்கத்தக்க மற்றும் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லா மின் உற்பத்தித் திட்டங்களைச் செயல்படுத்த வெல்ஸ்பன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்நிறுவனம் 1 கிகாவாட் மின்னுற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக நிறுவ னத்தின் துணைத் தலைவர் விநீத் மிட்டல் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் 1,100 மெகாவாட் மின் உற்பத்தி நிலையமும், ஆந்திர மாநி லத்தில் 100 மெகாவாட் மின் உற்பத்தி நிலையமும் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அந்தந்த பகுதிகளில் நிலவும் சூழலுக்கேற்ப காற்றாலை அல்லது சூரிய மின் உற்பத்தி ஆலைகள் அமைக்க முடிவு செய்துள்ளதாக மிட்டல் தெரிவித்துள்ளார்.

இந்நிறுவனம் மொத்தம் 11 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in