Published : 25 Feb 2015 10:14 AM
Last Updated : 25 Feb 2015 10:14 AM

உணவக பெட்டிகளை அகற்ற ரயில்வே அமைச்சகம் திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகிறது

எதிர்வரும் ரயில்வே பட்ஜெட்டில் ராஜதானியை தவிர்த்து, அனைத்து ரயில்களிலும் உள்ள உணவக (pantry coach) பெட் டிகள் அகற்றப்பட உள்ளன. அதற்கு பதிலாக 3ஏசி பெட்டி இணைக்கப்படும் என தெரிகிறது. இதன்மூலம் ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.2000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

இந்த பட்ஜெட்டில் பெரு மளவிலான மாற்றங்களைச் செய்ய ரயில்வே அமைச்சர் திட்ட மிட்டுள்ளார். இதை படிப்படியாகக் கொண்டு வருவதா அல்லது ஒரே சமயத்தில் நிறைவேற்றுவதா என்பதில்தான் அவருக்கு சற்று குழப்பம் நிலவுவதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உணவக பெட்டிகளை அகற்றி விட்டு ரயிலில் உணவு தயாரிக்கும் முறையை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, தயாரிக் கப்பட்ட உணவு மட்டும் சூடுபடுத் தப்பட்டு பயணிகளுக்கு விநியோ கிக்கப்படும்.

மேலும், பயணிகளின் உணவு தேவையை பூர்த்தி செய்ய ரயில்வேத் துறையினரோடு, தனியாரையும் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் ஆன்ட்ராய்டு போனில் அதற்குரிய ஆப்ஸை- தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன்மூலம் செய்யப்படும் உணவு ஆர்டர்கள், குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் தனியாரால் விநியோகிக்கப்படும்.

மிக முக்கியமாக ரயில்வேயின் மண்டல (zonal) முறை கைவிடப்படும் என தெரிகிறது. இதற்கு பதிலாக ரயில்வே மண்டலங்களானது, மாநில வாரியான கார்ப்பரேஷன்களாக பிரிக்கப்படலாம்.

மண்டலங்கள் அனைத்தும் 25 கார்ப்பரேஷன்களாக பிரிக்கப் படலாம். உதாரணமாக, கேரள ரயில்வே கார்ப்பரேஷன், தமிழ்நாடு ரயில்வே கார்ப்பரேஷன் என மாறலாம். இதன் மூலம் நிலங்களை கையகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எளிதாகும் என ரயில்வே அமைச்சகம் நம்புகிறது.

அமைச்சர் பதில்

ஃபேஸ்புக் , ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரயில்வே பட்ஜெட் குறித்த மக்களின் கேள்விகளுக்கு அமைச்சர் நேரடியாக பதிலளிப்பார். உதார ணமாக, இந்த சமூக தளங்கள் வழியாக பட்ஜெட் குறித்து மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர் யூ-ட்யூப் வீடியோவில் பதில் அளிப்பார். 26-ம் தேதி பட்ஜெட் தாக்கலான பிறகு மாலையில் அமைச்சர் பதிலளிப்பார் என தெரிகிறது.

இதேபோன்று 26-ம் தேதி இரவு 8 மணி முதல் 9 மணி வரை கூகுள் ஹேங்அவுட் வழியாக நிபுணர்கள் பங்கேற்கும் விவாதத்தில், ரயில்வே அமைச்சர் பங்கேற்று விளக்கங்கள் அளிப்பார். இது யூ-ட்யூப் வழியாகவும் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x