Published : 05 Feb 2015 11:23 AM
Last Updated : 05 Feb 2015 11:23 AM

இவரைத் தெரியுமா?- சுனில் கோத்வானி

$ ரெலிகேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்.

$ புதுடெல்லியில் பிறந்தவர். நியூயார்க் பல்கலை பாலிடெக்னிக் இன்ஸ்ட்டியூட்டில் கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டமும், தொழில் மற்றும் நிதி நிர்வாகத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர்.

$ இதற்கு முன்பு பல்வேறு நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இடம் பெற்றுள்ளார். எஸ்ஆர்எல், ரான்பாக்ஸி, ஏகன் ரெலிகேர் ஆயுள் காப்பீடு, போர்டிஸ் ஹெல்த்கேர் மற்றும் ரெலிகேர் குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்.

$ தொழில்துறை சார்ந்த சிறந்த பேச்சாளர், சிஐஐ, பிக்கி போன்ற தொழில் கூட்டமைப்புகளில் சிறந்த பங்களிப்பு இவருக்குண்டு. உலக அளவில் பல விருதுகளை வாங்கியிருக்கிறார்.

$ 2006 முதல் ரெலிகேர் செக்யூரிட்டீஸ் நிறுவனம் மற்றும் எஸ்கார்ட் மருத்துவமனையின் இயக்குநராகவும் இருந்து வருகிறார்.

$ தலைவர் என்பவர் இதயத்திலிருந்து உத்திகளை வகுக்கிறார். மேலாளர் என்பவர் தலையிலிருந்து முடிவுகள் எடுக்கிறார். சரியான விஷயத்தை, சரியான நேரத்தில் செய்து முடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பது இவரது கொள்கை

$ மக்களே மதிப்பு மிக்க சொத்துக்கள் என்பதே இவரது தலைமைப் பண்புக்கான பாடம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x