

இந்திய நிறுவனங்கள் சமூக மேம்ப்பாட்டுக்காக செலவு செய்யும் தொகை நான்கு மடங்கு உயரும் என்று நாஸ்காம் அறக்கட்டளை மற்றும் பிசிஜி நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. நிறுவனங்கள் தங்களது லாபத்தில் 2 சதவீத தொகையை சமூக நலன்களுக்கு செலவிட வேண்டும் என விதி இருக்கிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த விதிக்கு ஏற்ப செலவு செய்யும்பட்சத்தில் இந்த தொகை நடப்பு நிதியாண்டில் 250 கோடி டாலர் (ரூ.15,000 கோடி) வரை உயரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. 2012-13-ம் நிதி ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் சமூக நலன்களுக்காக 60 கோடி டாலர் மட்டுமே செலவு செய்தன. இந்த தொகையில் ரிலையன்ஸ், கோல் இந்தியா, டாடா ஸ்டீல் உள்ளிட்ட முக்கிய 10 நிறுவனங்கள் பாதிக்கும் மேற்பட்ட தொகையை செலவு செய்தன.
இந்த விதிமுறைகள் கடந்த வருடம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தன.