Last Updated : 15 Feb, 2015 12:48 PM

 

Published : 15 Feb 2015 12:48 PM
Last Updated : 15 Feb 2015 12:48 PM

வணிக நூலகம்: பேச்சை வளர்க்கும் கலை!

2006ம் ஆண்டு வரை பொது மேடைகளில் பேசுவது வேறுமாதிரியாக இருந்து வந்தது. ஆனால், 2006ம் ஆண்டு ஆண்டர்சன் என்பவர் துவக்கிய TED பேச்சுக்கலை பொது இடங்களில் பரப்புரை செய்பவர்களின் பழக்கத்தை புரட்டிப்போட்டது.

எந்த கருத்தாக இருந்தாலும் யார் சொல்வதாக இருந்தாலும், எங்கிருந்து சொல்வதாக இருந்தாலும் 18 நிமிடங் களுக்குள் சொல்லி முடிக்க வேண்டும். அடுத்தவர் குறட்டை விட்டு தூங்கினாலும் நிறுத்தாமல் சொல்வதைத் தவிர்த்து, எளிதில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் புரியும் பாணியிலும் பேசுவதை TED கலை என்று அறிமுகப்படுத்தினார். ஒரே நாளில் 2 கோடி பேர்களுக்கு மேல் பார்க்கக்கூடிய ஒரு வலைத்தள அமைப்பாக மாறியது.

ஒரு கூட்டம் முடிந்ததும் அடுத்த முறை பேசும் பொழுது TED-ல் பேசுவதை போல இருக்க வேண்டும் என்ற ஒரு அளவீடு புழக்கத்திற்கு வந்தது. கருத்து களை முன்னிலைப்படுத்தும் பொழுது அது புதுமையானதாகவும், மனதைச் சென்று தைக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். கணிப்பொறியின் துணை கொண்டு வண்ண வண்ண POWERPOINT SLIDE களில் ஏராளமான எண்ணங்களை தாராளமாக எழுதி படித்து முடிக்கும் பொழுது, கேட்டுக்கொண்டிருப்பவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்கள். இதை மாற்றுவதற்கு வந்த மாமருந்து TED.

இவை 90 மொழிகளில் மொழியாக்கம் மற்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது ஹாரி பாட்டர் என்ற நூல் சாதித்ததை விட அதிகம்.

கல்வித் தரத்தின் மேம்பாட்டிற்காக இந்த பேச்சுக் கலையை அமெரிக்கா முழு வதும் உபயோகித்து வருகிறார்கள். மிகச்சிறந்த 500 பேச்சாளர்களின் பேச்சு களும் அந்த பேச்சாளர்களின் நேர்முக மும் இரண்டு கோடி முறைகளுக்கு மேல் பார்த்ததில் ஒரே ஒரு செய்தியைத் தான் வெளிப்படுத்துகிறது. அதாவது மனித மூளைக்கும் TED பாணிக்கும் உள்ள பிரிக்க முடியாத ஒற்றுமை மற்றும் அடிமையாகும் மனப்பாங்கு ஆகும்.

TED பாணி என்பது கெட்டது அல்ல. ஆனால் அந்த TED பாணிக்கு 9 பொது வான காரணிகள் வலுசேர்ப்பவை களாகக் குறிப்பிடுக்கிறார்கள்.

* திறமைகளைக் கட்டவிழ்த்துவிடு

* கதை போல் கருத்து சொல்

* அயராது பயிற்சி செய்

* கேட்பவருக்கு புதியன தா

* உணர்வு பூர்வமான கருத்துகளை வெளிப்படுத்து.

* நகைச்சுவையாக, கேலி பேசாமல் கருத்து கூறு.

* 18 நிமிடத்தை பற்றிக்கொள்

* எண்ணும் எழுத்தும் தவிர்த்து படங்களை இணை.

* உன் வழியை (தனி வழியை) பின்பற்று.

நீங்கள் உங்கள் கருத்துக்களால் ஈர்க்கப்படாமல் மற்றவர்களை ஈர்க்கமுடியாது. ஆர்வம், உற்சாகம் பொருள் பொதிந்த தலைப்புக்கு ஏற்ற கருத்துக்களைக் கட்டவிழ்த்து விடும்பொழுது கேட்பவர் கள் மகுடி கேட்ட நாகம் ஆவார்கள்.

கருத்துகள், எண்கள் ஆகியவை களை கொண்டு யாரையும் ஈர்க்கமுடி யாது. ஷெரில் சாண்ட்பெர்க் என்ற முக நூலின் தலைமை செயல் அலுவலர் கதைகள் மூலம் நிகழ்ச்சியை தெளிவுப் படுத்தி, கதைகளால் கருத்தை இணைத்து ஆர்வத்தோடு கருத்து களால் ஒவ்வொருவரையும் ஈர்க்கும் திறமை பெற்றுள்ளார். அது போன்ற கதைகளால் கருத்துகளை இணைக்கும் பாணி மூளையை தூண்டி கருத்துகளை ஏற்கச் செய்கின்றது.

மூளை ஆராய்ச்சியாளர் ஜில் போல்டே டெய்லர் பேச்சினை 1.5 கோடி முறை வலைதளங்களில் கேட்டு பிரமிப்பு அடைந்திருக்கிறார்கள். ஆனால், அவரே 18 நிமிட பேச்சுக்கு 200 முறைகளுக்கு மேல் பயிற்சி மேற்கொண்டு அந்த பயிற்சியிலேயே லயித்ததாக கூறினார். ஆக அயராது பயிற்சி செய்து சொல்லும் கருத்தை உள்வாங்கி, எளிதாக்கி யாரே உற்ற நண்பருடன் உரையாடுவது போல சரளமாக பேசுவதற்கு இந்த பயிற்சியே காரணம். ஆதலினால், அயராது பயிற்சி செய்வீர்.

மனித மூளையானது புதுமையை விரும்பும். எந்த ஒரு கூட்டத்திலும் புதியவைகளை தெரிவிப்பதிலும். கல்வி புகட்டுவதிலும், ஊக்குவிப்பதிலும் முனைப்பு இருப்பது அவசியம். அப் போது தான் கேட்பவர்கள் ஏதோ ஒன்றை புதிதாக அறிந்துகொள்கிறார்கள்.

மகிழ்ச்சி, பயம், அதிர்ச்சி, ஆச்சர்யம் போன்ற உணர்வுகள் கருத்துகளை உள் வாங்க பெரிதும் உதவும். பில் கேட்ஸ் பேச்சில் இவை அனைத்தையும் வெளிப் படுத்துக்கின்றன. எண்ணங்களின் எழுச்சி உணர்வுகளின் கலவையில்தான் உண்டாகும். சுரத்தின்றி தூக்க தாளலயத்தோடு பேசுபவர்கள், கேட்பவர்களின் நினைவிலிருந்து தூக்கி எறியப்படுகிறார்கள்.

நகைச்சுவை பார்வையாளர்களின் கருத்தை நோக்கி ஈர்க்கிறது. நகைச்சு வை உணர்வு நெருக்கத்தை ஏற்படுத்து கின்றது. விருப்பத்தை உருவாக்குகின் றது. நகைச்சுவையாக பேசும்பொழுது கேலியாகவோ அல்லது வேடிக்கை யாகவோ பேசுதல் தவறு. நகைச்சுவை உண்டாக்கும் நெருக்கத்தை மற்ற சுவைகள் கெடுத்துவிடும். உதாரணமாக, “மாலை நேரக்கேளிக்கை கூட்டங்களில் அடிக்கடி தங்களை கல்வியாளர் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளுபவர்கள் கல்வியை விட்டு எவ்வளவு தூரத்தில் இருப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே”.

TED-ல் 18 மணிதுளிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது விதி. ஏனென்றால் அந்த குறிப்பிட்ட நேர வினாடிக்கு பிறகு அறிவாற்றல் தடைப்படும். அதிகபட்ச செய்திகள் கேட்பவரை சென்றடையாது. சீரிய செய்திகளுக்கு அது அதிக காலக்கெடு. கேட்பவர்களின் கவனத்தே ஈர்ப்பில் வைப்பதற்கு குறைந்த காலக்கெடு. ஆக 18 நிமிடங்களில் சொல்ல முடியாத செய்தியை யாராலும் எப்பொழுதும் தெளிவாக சொல்ல முடியவே முடியாது.

குறைந்த அளவு எழுத்தும், எண்ணும் இருத்தல் அவசியம். மாறாக அதிக அளவில் படங்களும், நகைச்சுவை சித் திரங்களும் கேட்பவர்களிடம் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தும். புள்ளி வைத்துக்கோலம் போடலாம். புள்ளி புள்ளிகளாக வைத்து கருத்துக்களை சொல்லக் கூடாது. படங்களும் நகைச்சுவை சித்திரங்களும் எளிதாக கருத்துக்களை இணைத்து உள்வாங்க உதவுகின்றது.

இந்த புத்தகத்தின் ஆசிரியர் கார்மைன் கலோ மானியங்களை நிகழ்த்தியிருக்கிறார். உலகின் மிகச் சிறந்த பேச்சுக்கள் எவ்வாறு சிறந்தவை யாக உருப்பெற்றன என்பதை தெளிவாக கூறுக்கின்றார். கதைகள், விளக்கங் கள், உள்ளுணர்வுகள், ஆர்வம் கொப் பளிக்கும் செய்திகள் போன்றவைகள் மூலம் எவ்வாறு மற்றவர்கள் நம்மை ஆர்வமுடனும், தேவையுடனும் செவிமடுப்பார்கள் என்பதை தன்வழி தனிவழியாக மாற்றி எழுதிமுடிக்கிறார். இவர் கூறியிருக்கும் 9 காரணிகளும் ஒன்றை ஒன்று வலுசேர்த்து ஒரே நேர்கோட்டில் உன்னதத்தின் உச்சத் திற்கு வழிகாட்டுகிறது.

rvenkatapathy@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x