

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி பட்டியலில் 50 பங்குகளில் இருக்கின்றன.
சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்த பட்டியலில் மாற்றம் செய்யப்படும். இப்போது டி.எல்.எப் மற்றும் ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் ஆகிய பங்கு களில் வெளியேறி யெஸ் வங்கி மற்றும் ஐடியா செல்லுலர் பங்குகள் அந்த பட்டியலில் இடம் பிடிக்கும் என்று அறிவிக்கபட்டிருக்கிறது.
இந்த மாற்றம் வரும் மார்ச் 27-ம் தேதியில் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிகிறது.
அதே சமயத்தில் சி.என்.எக்ஸ் 100 பங்குகள் பட்டியலில் இருந்தும் இந்த இரண்டு பங்குகள் வெளியேறுகின்றன.
இதற்கு பதிலாக இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் மற்றும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் பங்குகள் இந்த பட்டியலில் இடம் பிடிக்கின்றன.