‘சிகரெட் விதிமுறைகள் நடைமுறைக்கு உகந்ததாக இல்லை’

‘சிகரெட் விதிமுறைகள் நடைமுறைக்கு உகந்ததாக இல்லை’
Updated on
1 min read

சிகரெட் மீதான விதிமுறைகள் நடைமுறைக்கு ஏற்றவையாக இல்லை என்று அனைத்திந்திய புகையிலை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்திருக்கிறது.

புதிய விதிமுறைகளின்படி சிகரெட் அட்டையில் 85 சதவீத இடம் எச்சரிக்கை விளம்பரங்களுக்கே சென்றுவிடுகிறது. இது நடை முறைக்கு ஏற்றதாக இல்லை என்று இந்த சங்கம் தெரிவித்திருக்கிறது.

அடுத்த ஏப்ரல் முதல் இந்த விதி அமலுக்கு வருகிறது. அதில் புகையிலை பொருட்களின் அட்டையில் எச்சரிக்கை வாசகங்கள் மற்றும் படங்கள் இடம்பெற வேண்டும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் 60 சதவீத இடம் படங்களுக்காகவும் 25 சதவீத இடம் எச்சரிக்கை வாசகங்களுக்காகவும் ஒதுக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in