

காற்றாலை நிறுவனமான சுஸ்லான் நிறுவனத்தில் சன் பார்மா நிறுவனத் தின் தலைவர் திலிப் சாங்வி ரூ.1,800 கோடி ரூபாயை முதலீடு செய் திருக்கிறார். இந்த முதலீட்டுக்கு பிறகு சுஸ்லான் நிறுவனத்தில் இவர் குடும்பத்தின் பங்கு 23 சதவீதமாக இருக்கிறது.
சுஸ்லான் நிறுவனத்தின் நிறு வனர் துல்சி டான்டி குடும்பத்திடம் 24 சதவீத பங்குகள் இருக்கின்றன. ஆனாலும் நிர்வாக கட்டுப்பாடு துல்சி டான்டி குடும்பத்தின் வசம் இருக்கும். மரபு சாரா எரிசக்தி துறையில் சுஸ்லான் நிறுவனம் சர்வதேச நிறுவனமாக வளர வாய்ப்பு இருக்கிறது என்று திலிப் சாங்வி தெரிவித்தார். திலிப் சாங்வி குடும்பத்தின் முதலீட்டின் காரணமாக முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால அடிப்படையில் நல்ல லாபத்தை கொடுக்க முடியும் சுஸ்லான் குழும தலைவர் துல்சி டான்டி தெரிவித்தார்.
இதற்கிடையில் இந்த நிறுவனத் தின் டிசம்பர் காலாண்டு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. கடந்த காலாண்டில் இந்த நிறுவனத்தின் நஷ்டம் ரூ. 6,538 கோடியாக இருக் கிறது. கடந்த வருடம் இதே காலாண் டில் ரூ. 1,075 கோடி அளவுக்கு நஷ்டம் இருந்தது. மொத்த வருமான மும் ரூ. 5,052 கோடியில் இருந்து ரூ. 4,977 கோடியாக குறைந்திருக் கிறது. வெளிநாட்டில் இருக்கும் துணை நிறுவனத்தை விற்றதன் கார ணமாக இந்த இழப்பு ஏற்பட்டதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது.