

20 வருடங்களுக்கு பிறகு ஒரு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்திருக்கிறது. அதே சமயத்தில் ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் ஒரு ரூபாய் நோட்டுகளும் செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக் கிறது.
புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் வண்ணங்களிலும் வித்தியாசமாக இருக்கும். இவை இளஞ்சிவப்பு (பிங்க்) மற்றும் பச்சை வண்ணத்தில் இருக்கும்.
ஒரு ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களை மத்திய அரசு வெளியிடும். அதனால் இதில் நிதி அமைச்சக செயலாளரின் கையெழுத்து இருக்கும். ஆனால் ஒரு ரூபாய் தவிர மற்ற நோட்டுகளில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் கையெழுத்து இருக்கும்.
அச்சடிப்பதற்கு அதிகம் செலவாகிறது என்பதால் 1994-ம் ஆண்டு ஒரு ரூபாய் நோட்டு களை அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டது. 1995-ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் 2 ரூபாய் நோட்டுகளையும், அதே ஆண்டு நவம்பர் மாதம் 5 ரூபாய் நோட்டுகளையும் அச்சடிப்பதை மத்திய அரசு நிறுத்தியது. இருந்தாலும் பழைய நோட்டுகள் இன்னும் ஏற்றுக்கொள்ளப்பட்டு புழக்கத்தில் இருக்கின்றன.