Published : 23 Feb 2015 10:35 AM
Last Updated : 23 Feb 2015 10:35 AM

முக்கிய பொதுத்துறை நிறுவனங்களை பட்டியலிட வேண்டும்: தீபக் பரேக் ஆலோசனை

பொதுத்துறை நிறுவனங்களான ஏர் இந்தியா, பி.எஸ்.என்.எல். மற்றும் எல்.ஐ.சி. ஆகிய நிறுவனங்களை பட்டியலிட வேண்டும். இந்த நிறுவனங்களில் பல லட்சம் கோடி ரூபாய் முடங்கி இருக்கிறது என்று ஹெச்.டி.எப்.சியின் தீபக் பரேக் தெரிவித்தார்.

இருந்தாலும் இதுபோன்ற பெரிய நிறுவனங்களில் பங்கு களை விலக்கி கொள்வதற்கு அரசியல் ரீதியாகவும், தொழிற் சங்கங்கள் தரப்பிலும் எதிர்ப்பு உள்ளது. இது போன்ற எதிர்ப்புகள் கடந்த ஆட்சியில் இருந்தே இருந்து வருகிறது.

உதாரணத்துக்கு கடந்த ஆட்சியில் பி.எஸ்.என்.எல்., இந்திய ரயில்வே உள்ளிட்ட நிறுவனங்களை மேம்படுத்தும் கமிட்டியில் உறுப்பினராக இருந்தேன். இந்த கமிட்டி கொடுத்த எந்த பரிந்துரையும் ஏற்கப்படவில்லை என்றார்.

ஹெச்.டி.எப்.சி. சார்பாக முடி வெடுத்து புதிய திட்டங்களை அறிவிக்கிறேன். ஒரிரு வருடங் களுக்கு பிறகு அந்த திட்டம் தோல்வியில் முடிவடையும்போது, இது ஒரு தவறான பிஸினஸ் முடிவு என்பதோடு விஷயம் முடிந்துவிடுகிறது.

இயக்குநர் குழு இது குறித்து மேலும் எந்த விசாரணையும் செய்யாது. ஆனால் அரசாங்கத்தை பொறுத்த வரையில் அரசு அதிகாரிகள் எடுக்கும் முடிவுகள் கேள்வி கேட்கப்படுகின்றன. அதனால் அவர்கள் முடிவுகள் எடுக்காமல் இருக்கிறார்கள்.

அதனால் அரசு அதிகாரிகளை நாம் பாதுகாக்க வேண்டும். நம்மிடம் திறமையான நபர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் முடிவெடுப்பதில்லை. முடிவெடுத்த பலர் பல விசாரணையில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

ஜன் தன் யோஜனாவின் கீழ் பல வங்கி கணக்குகள் பயன்படுத்தப்படாமல் இருந்தால் கூட, நேரடி மானியம் வங்கி கணக்குக்கு வரும் போது அந்த கணக்குகள் பயன்படுத்தப்படும் என்றார்.

365 நாட்களிலும் சீர்திருத்தம் தொடரும் என்று நிதி அமைச்சர் ஏற்கெனவே கூறியிருந்ததால், டெல்லி தேர்தலில் தோற்றதால் இலவச திட்டங்கள் இருக்காது என்று நினைக்கிறேன். இந்தியாவில் மட்டும்தான் பட்ஜெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். சீர்திருத்தம் தினமும் நடக்க வேண்டியது என்றார்.

ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி உள்ளிட்டவற்றில் இருக்கும் காப்பீடு நிறுவனங்கள் இன்னும் ஓரிரு வருடங்களில் பங்குச் சந்தையில் பட்டியலிடும் போது ஏன் எல்.ஐ.சி. பட்டியலிடக்கூடாது என்று கேள்வி எழுப்பினார். அரசாங்கம் 10 சதவீத பங்கு களை விற்கும்போது அனைத்து இந்தியர்களும் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x