விமான நிலைய நிர்வாகம்: டாடா, அதானி குழுமம் ஆர்வம்

விமான நிலைய நிர்வாகம்: டாடா, அதானி குழுமம் ஆர்வம்
Updated on
1 min read

நாட்டிலுள்ள விமான நிலையங் களை நிர்வகிக்க டாடா மற்றும் அதானி குழும நிறுவனங்கள் உள்பட 9 தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன.

இவ்விரு நிறுவனங்களோடு ஜிஎம்ஆர், ஜிவிகே, எஸ்ஸெல், சீமென்ஸ், பிளெமிங்கோ, ஐபிடிஎப் ஜூரிச் மற்றும் கொச்சி சர்வதேச விமான நிறுவன நிர்வாகம் உள் ளிட்ட நிறுவனங்களும் ஆர்வம் தெரிவித்துள்ளன.

இந்திய விமான ஆணையம் நிர்வகிக்கும் சென்னை, கொல் கத்தா, ஜெய்ப்பூர், அகமதாபாத் விமான நிலையங்களை தனியாரி டம் விட முடிவு செய்யப்பட்டது. இதற்காக தகுதி வாய்ந்த நிறு வனங்களிடமிருந்து விண்ணப்பங் கள் கடந்த மாதம் கோரப்பட்டன.

இந்த விமான நிலையங்களை நவீனப்படுத்தி அவற்றை நிர்வகிக் கும் பொறுப்பை தனியாரிடம் விட முடிவு செய்யப்பட்டது. ஆனால் விமான நிலையங்களை முற்றிலு மாக தனியார் நிர்வாகத்திடம் விடுவதென்ற முடிவை கடந்த மாதம் அரசு மாற்றியது.

இந்நிலையில் ஜிஎம்ஆர் ஏர்போர்ட்ஸ், ஜிவிகே, டாடா ரியால்டி, எஸ்ஸெல், அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மேம்பாட்டு நிறுவனம், சீமென்ஸ் தபால்துறை சரக்கு மற்றும் விமான சரக்கு நிர்வகிக்கும் நிறுவனம், சர்வதேச வர்த்தக மேம்பாடு புளுகாபென் (ஜூரிச்),. பிளமிங்கோ வரியற்ற வர்த்தக நிறுவனம், கொச்சி சர்வதேச விமான நிறுவனம் ஆகியன இந்த நான்கு விமான நிலையங்களை நவீனப்படுத்த ஆர்வம் தெரிவித்துள்ளன.

தனியார் நிறுவனங்கள் இந்த விமான நிலையங்களை நவீனப்படுத்தி நிர்வகிக்க குறைந்தது 30 ஆண்டுக்காலம் தேவை என கோரியுள்ளன. விமான போக்கு வரத்து மற்றும் எதிர்காலத்தில் அதிகரிக்கும் விமான போக்குவரத்து இவற்றைக் கருத்தில் கொண்டு 30 ஆண்டுகளுக்கு குத்தகை (லைசென்ஸ்) அளிக்க வேண்டுமென கோரியுள்ளன.

ஏற்கெனவே விமான நிலையங்களை நிர்வகித்த அனுபவம் உள்ள நிறுவனங்களுக் குத்தான் அனுமதி வழங்கப்படும் என்பதை கட்டாயமாக்குமாறு ஏஏஐ-யிடம் சில நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.

முந்தைய காங்கிரஸ் அரசின் திட்டப்படி இப்போதைக்கு அகமதாபாத், ஜெய்ப்பூர் விமான நிலையங்களை பராமரிக்க தனியாரிடம் விட முடிவு செய்துள்ளதாக பாஜக அரசு தெரிவித்துள்ளது. சென்னை, கொல்கத்தா விமான நிலையங்கள் ரூ. 5 ஆயிரம் கோடி செலவில் நவீனமயமாக்கப்பட்டுள்ளதால் அவற்றை இந்திய விமான ஆணையகமே நிர்வகிக்கும் என முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

புதிதாக விமான நிலையங்களை உருவாக்கி அவற்றை பராமரிக்கும் பொறுப்பை தனியாரிடம் விடுவதற்கு அனுமதிக்கலாம், அதற்குப் பதிலாக ஏற்கெனவே உள்ள விமான நிலையங்களை பராமரிக்கும் பொறுப்பை தனியாருக்கு விட்டுத் தர அனுமதிக்க மாட்டோம் என்று இந்திய விமான நிலைய ஆணைய ஊழியர்கள் சங்க பொதுச் செயலர் பல்ராஜ் சிங் அதால்வத் தெரிவித்தார்.

ஆனால் தனியார் நிறுவனங்கள் வருவாய் அதிகம் தரும் விமான நிலையங்களை குத்தகைக்கு எடுப்பதில் குறியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in