

நடந்து முடிந்த நிதி ஆண்டில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 80,000 கோடி ரூபாயை இந்திய பங்குச்சந்தையில் நிகர முதலீடு செய்திருக்கிறார்கள்.
நடப்பு நிதி ஆண்டில் 79,709 கோடி ரூபாய் இந்திய பங்குச் சந்தையில் அந்நிய முதலீடு வந்திருப்பதாக பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான ‘செபி’ தெரிவித்திருக்கிறது. தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்திய பங்குச்சந்தையில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் முதலீடு வந்துக்கொண்டிருக்கிறது.
2008-09-ம் ஆண்டில் 47,706 கோடி ரூபாயை அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளியே எடுத்தனர்.
கடன் சந்தை
இந்திய கடன் சந்தையில் இருந்து நடப்பு நிதி ஆண்டில் 28,000 கோடி ரூபாயை அந்நிய முதலீட்டாளர்கள் வெளியே எடுத்திருக்கிறார்கள்.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்ததே கடன் சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறியதற்கு காரணமாகும்.