என் சொல் பேச்சை கேட்கும் கார்- நடிகை ஐஸ்வர்யா

என் சொல் பேச்சை கேட்கும் கார்- நடிகை ஐஸ்வர்யா
Updated on
1 min read

ஹூண்டாய் ஐ 10 ‘ஆட்டோமேட்டிக்’ என்னுடைய புதிய தோழி இது. கார் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற பல ஆண்டுக் கனவை நிறைவேற்றி வைத்ததும் இந்த பிராண்ட்தான்.

புதிதாக டிரைவிங் கற்றுக்கொண்டதால், பிரண்ட்ஸ் எல்லோரும் ‘கண்டிப்பா இந்த புதிய காரை எங்காவது இடித்து வைக்கப்போற’ என்று கிண்டலடிப்பாங்க.

இந்த கார் என்னோட பேச்சைக் கேட்பது மாதிரி ஒரு உணர்வு. இதுவரைக்கும் ஒரு சின்ன கீறல் கூட விழாமல் பயணித்து வருகிறேன்.

பெரும் மதிப்புள்ள கார்களில் மட்டுமே ‘ஆட்டோமேட்டிக்’ சிஸ்டம் இருக்கும் சூழலில் இந்த காரில் அந்த வசதி வந்தததும் இந்த காருக்கு அதிக கிராக்கி இருந்தது.

எனக்கு எப்பவுமே கருப்பு நிறம்தான் பிடிக்கும். என்னோட அதிர்ஷ்டம், ஒரே ஒரு கார் மட்டும் இருந்தது. உடனே வாங்கிவிட்டேன். இப்போதுதான் கொஞ்சம் வேகமாக ஓட்டக் கற்றுக்கொண்டேன். உடன் வரும் யார் கேட்டாலும் டிரைவிங் இருக்கையை கொடுக்க மாட்டேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in