Published : 24 Jan 2015 03:04 PM
Last Updated : 24 Jan 2015 03:04 PM

ரூ.120 கோடி இலக்கு: கே-7 திட்டம்

கணினி பாதுகாப்பு சார்ந்த ஆண்டி வைரஸ் மென்பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் இருந்து வரும் நிறுவனம் கே-7 கம்ப் யூட்டிங். 2015-16 நிதியாண்டில் ரூ.120 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 60 கோடியை எட்டும் என இந்த நிறுவனத்தின் இயக்குநர் கே. கேசவர்த்தனன் குறிப்பிட்டார்.

மேலும் தங்களது புதிய தயாரிப்புகளை இந்தியாவில் சந்தைப்படுத்த புனேவைச் சேர்ந்த சாக்ரி ஐடி சொல்யூஷன்ஸ் என்கிற நிறுவனத் துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப் பட்டுள்ளதாகவும் இந்த நிறுவனத்துக்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் இருப்பதால் ஆண்டி வைரஸ் மென் பொருட்களை சிறிய நகரங்களிலும் சந்தைப்படுத்த முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x