குஜராத்தில் ரூ.8500 கோடி முதலீடு: மாருதி திட்டம்

குஜராத்தில் ரூ.8500 கோடி முதலீடு: மாருதி திட்டம்
Updated on
1 min read

ஜப்பானை சேர்ந்த சுசூகி குழுமம் குஜராத் ஹன்சல்பூரில் 8,500 கோடி ரூபாய் முதலீடு செய்யப் போவதாக தெரிவித்துள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் குஜராத் முதல் அமைச்சர் ஆனந்திபென் படேல் கலந்துகொண்டார். இந்த தொழிற்சாலை 2017-ம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் மூன்று அசெம்பிளி பிரிவு இருக்கிறது. ஒவ்வொரு பகுதியில் 2.5 லட்சம் கார்கள் ஆண்டுக்கு உற்பத்தி செய்யப் படும். ஒவ்வொரு பிரிவுக்கும் 2500 கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும் என்று தெரிகிறது.

மாருதி நிறுவனத்துக்கு ஏற்கெனவே குர்கான் மற்றும் ஹரியானாவின் மானேசர் ஆகிய பகுதிகளில் தொழிற்சாலைகள் இருக்கின்றன. இதில் ஆண்டுக்கு 15.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in