Published : 10 Jan 2015 11:37 AM
Last Updated : 10 Jan 2015 11:37 AM

கவின் பார்தி மிட்டல் - இவரைத் தெரியுமா?

$ ஹைக் (Hike) என்னும் மெசேஜ் அப்ளிகேஷன் நிறுவனத்தின் நிறுவனர். பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவரான சுனில் பார்தி மிட்டலின் மகன்.

$ லண்டனில் இருக்கும் இம்பீரியல் கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் மற்றும் நிர்வாகம் படித்தவர்.

$ 2007-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் மற்றும் 2008-ம் ஆண்டு கோல்ட்மென் சாக்ஸ் நிறுவனத்திலும் பயிற்சி பெற்றவர்.

$ 2009-ம் ஆண்டு AppSpark என்னும் அப்ளிகேஷன் நிறுவனத்தை ஆரம்பித்தார். இதில் படத்துக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யமுடியும். 2011-ம் ஆண்டு foodster என்னும் அப்ளிகேஷனையும் தொடங்கினார்.

$ இப்போது ஆரம்பித்திருக்கும் அப்ளிகேஷன், சோசியல் மீடியா, விளையாட்டு உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தும் என்று தெரிவித்திருக்கிறார். இதற்காக ஜப்பானின் சாப்ட்வங்கி, டைகர் குளோபல் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து 6.5 கோடி டாலர் முதலீட்டை திரட்டி இருக்கிறார்.

$ இந்த அப்ளிகேஷனை 3.5 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x