9 சதவீத வளர்ச்சிக்கு ஏற்ற நாடு இந்தியா: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

9 சதவீத வளர்ச்சிக்கு ஏற்ற நாடு இந்தியா: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்
Updated on
1 min read

அடுத்த வருடம் இந்தியாவின் வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும். 9 சதவீத வளர்ச்சிக்கு தகுதியான நாடு என்று டாவோஸில் நடந்த உலக பொருளாதார மைய மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். இந்த மாநாட்டில் மேலும் அவர் கூறியதாவது.

நிதிப்பற்றாக்குறையை மூன்று சதவீதத்துக்குள் குறைப்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்திருக் கிறோம். மேலும் மானியத்தை மொத்தமாக குறைக்க முடியாது. தேவையற்ற மானியங்களைக் குறைப்போம். வேகமாக செயல்படுவதை மத்திய அரசு விரும்புகிறது. சீர்திருத் தங்களை கொண்டு வருவதில் வேகமாக செயல்பட்டுவருகிறோம்.

ஊழல் இந்தியாவில் தொழில் புரிவதற்கான செலவுகளை அதிகரிப்பது மட்டுமல்லாமல் நாட்டின் நம்பகத்தன்மையும் குறைக்கிறது. மேலும் பணவீக்கத்தை போதுமான நிலையிலே வைத்திருக் கிறோம். கச்சா எண்ணெய் விலை குறைந்ததாலும் பணவீக்கம் குறைந்தது. கச்சா எண்ணெய் குறைந்ததால் மானியங்களை குறைக்க முடிந்தது. தவிர நடப்புக்கணக்கு பற்றாக்குறையும் குறைந்தது.

கூட்டு கூட்டம்

முக்கியமான எதிர்கட்சி காப்பீடு மசோதாவுக்கு சாதகமாக இருப்பதால் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறும் என்று நம்புகிறேன். ஒரு வேளை இந்த மசோதா நிறைவேறாவிட்டால் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தை கூட்டும் பட்சத்தில் அங்கு அரசுக்கு போதுமான பலம் இருக்கும், அப்போது நிறைவேற்றப்படும்.

இந்த மசோதாவை பற்றி நாம் பலமுறை பேசிவிட்டோம். ஆனால் இறுதி முடிவு இன்னும் எடுக்கவில்லை. ஒரு வேளை அவசர சட்ட காலகட்டத்தில் யாராவது முதலீடு செய்திருந்தாலும், இந்த மசோதா திரும்பபெறபடாது. அதனால் முதலீட்டாளர்கள் மார்ச் 31-ம் தேதி முன்பு கூட வரலாம்.

மண்ணெண்ணெய் மானியம் குறையும்

செலவுகளை குறைப்பதற்காக மண்ணெண்ணெய்க்கு கொடுக்கப்படும் மானியத்தில் சீர்திருத்தம் செய்யப்படும். ஏற்கெனவே பெட்ரோல், டீசல் மானியம் குறைக்கப்பட்டது. சமையல் எரிவாயுக்கு கொடுக் கப்படும் மானியத்தில் சீர்திருத்தம் செய்திருக்கிறோம். அதேபோல மண்ணெண்ணெயிலும் செய்யப் படும். மானியத்தை திரும்ப பெறமாட்டோம். ஆனால் தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

நிதிப்பற்றாக்குறையை குறைக்க வேண்டி இருக்கிறது. தவிர புதிய திட்டங்களுக்கும் நிதி தேவைப்படுகிறது. அதனால் தேவை இல்லாத மானியங்களை குறைக்க வேண்டும் என்றார் அருண் ஜேட்லி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in