

சந்தை மதிப்பில் இந்தியாவில் பெரிய வங்கியான ஹெச்.டி.எப்.சி.சர்வதேச அளவில் 45-வது இடத்தில் இருக்கிறது. 2014-ம் ஆண்டு இறுதி நிலவரத்தை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியலை ரெல்பேங்க்ஸ் (Relbanks) தயாரித்திருக்கிறது.
ஹெச்.டி.எப்.சி. வங்கியின் சந்தை மதிப்பு 4100 கோடி டாலராக இருக்கிறது. சர்வதேச வங்கிகளான டிபிஎஸ், கிரெடிட் சூஸ், ஸ்டாண்டர்ட் சார்ட்டட் ஆகிய வங்கிகளை விட ஹெச்.டி.எப்.சி. சந்தை மதிப்பில் முன்னணியில் இருக்கிறது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 51-வது இடத்திலும், ஐசிஐசிஐ வங்கி 55-வது இடத்திலும் இருக்கின்றன. 7 கோடி வாடிக்கையாளர்கள், 9,000 கிளைகள், 28,439 கோடி டாலர் சந்தை மதிப்பு என அமெரிக்காவின் வெல்ஸ் போர்கோ (Wells Fargo) முதல் இடத்தில் இருக்கிறது. இதற்கடுத்து 26,970 கோடி டாலர் சந்தை மதிப்புடன் இண்டஸ்ட்ரியல் மற்றும் கமர்சியல் சீன வங்கி இரண்டாமிடத்தில் இருக்கிறது. மூன்றாம் இடத்தில் ஜேபி மார்கன் சேஸ் இருக்கிறது.
முதல் பத்து வங்கிகளில் அமெரிக்காவில் இருந்து 4 வங்கிகளும், சீனாவில் இருந்து 4 வங்கிகளும், இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் இருந்து தலா ஒரு வங்கியும் இடம் பிடித்துள்ளன.
ஹெச்.டி.எப்.சி. வங்கி செப் டம்பர் காலாண்டில் நிகர லாபம் 20 சதவீதம் உயர்ந்தது. தொடர்ந்து ஐந்து காலாண்டுகளாக 30 சதவீதத்துக்கு கீழே நிகர லாபத்தின் வளர்ச்சி இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பு தொடர்ந்து 37 காலாண்டுகளாக இந்த வங்கியின் நிகரலாபம் 30 சதவீத வளர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.