

யுனைடெட் இந்தியா (யுஐ) இன்சூரன்ஸ் நிறுவனம் முதல் முறையாக காப்பீட்டு ஆலோசகர்களுக்கான மாநாட்டை சென்னையில் நடத்தியது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆயிரத்துக்கும் அதிகமான ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.
பொதுக்காப்பீட்டில் 77 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள மத்திய அரசு நிறுவனமான யுனைடெட் இந்தியா நிறுவனம் இந்த மாநாட்டில் மிகச் சிறப்பாக செயலாற்றிய முன்னணி இன்சூரன்ஸ் ஏஜென்டுகளைக் கவுரவித்துள்ளது.
நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மிலிந்த் காமத் சிறந்த ஏஜென்டுகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.