மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனங்களிடம் எச்சரிக்கை தேவை: பொதுமக்களுக்கு ஆர்பிஐ அறிவுறுத்தல்

மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனங்களிடம் எச்சரிக்கை தேவை: பொதுமக்களுக்கு ஆர்பிஐ அறிவுறுத்தல்
Updated on
1 min read

மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதிக லாபம் கொடுப்பதாக இந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

அதிக உறுப்பினர்கள் சங்கிலி தொடர் மூலம் இணைத்து, அவர்களிடமிருந்து வசூலிக்கும் அதிக கட்டணம் மூலமாக அதிக வருமானத்தை இந்த நிறுவனங்கள் தருகின்றன. இதில் முதலில் சேர்ந்த நபர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும். கடை சியாக சேரும் நபர்களுக்கு பெரிய லாபம் இருக்காது.

அதேபோல இந்த சங்கிலி அறுபடுகின்ற கடைசியாக சேர்ந்த நபர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று முதலீட் டாளர்களை எச்சரித்துள்ளது ரிசர்வ் வங்கி. அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு இந்த திட்டங்களில் பொதுமக்கள் முதலீடு செய்ய வேண்டாம் என்று ஆர்பிஐ தெரிவித்தது. மேலும், இதுபோன்ற திட்டங்களில் முதலீட்டை திரட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in