

விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி நாட்டின் முன்னணி விளம்பர நிறுவனமான அமாகி மீடியா லேப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். ஆனால் அவர் முதலீடு செய்த தொகை குறித்த விவரம் வெளியாகவில்லை.
பெங்களூர் ஐஐஎம்- முன்னாள் மாணவரான என்.எஸ். ராகவன் உருவாக்கியுள்ள இந்நிறுவனம் 2008-09-ம் ஆண்டில் நடாத்தூர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மற்றும் மேபீல்ட் மூலம் 1.20 கோடி டாலரை திரட்டியது.
புதிதாக திரட்டப்பட்டுள்ள நிதி மூலம் எங்களது நெட்வொர்க்கை மேலும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், பிரிட்டன், சிங்கப்பூர், அமெரிக்காவில் அலுவலகங்களை திறக்க உள்ளதாகவும் அமாகி நிறுவன இணை நிறுவனர் பாஸ்கர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.