

பொருளாதார தேக்க நிலை காரணமாக இந்திய தொழில் நிறுவனங்கள் செய்யவிருந்த மொத்த முதலீட்டுத் தொகைகளில் 20 சதவீத அளவுக்கு குறைந் துள்ளதாக அசோசேம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. பல்வேறு மாநிலங் களில் இந்த முதலீடுகள் குறைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசோசேம் நிறுவனம் வெளி யிட்ட அறிக்கையில் மொத்தம் 1,421 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 3,62,805 கோடியாகும். செப்டம்பர் வரையான காலத்தில் இத்திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இதே காலத்தில் மொத்தம்த 1,906 திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ. 4,51,643 கோடியாகும்.
மத்திய தொழில் மேம்பாட்டுத் துறை (டிஐபிபி) வெளியிட்ட தகவல் அடிப்படையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் 45 சதவீத முதலீ டுகள் குவிந்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இம்மாநிலத்தில் மொத்தம் 24 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் மதிப்பு ரூ. 1,61,836 கோடியாகும். முந்தைய ஆண்டில் இம்மாநிலத்தின் மொத்த முதலீடு ரூ. 31,067 கோடியாக இருந்தது. முதலீடுகளை ஈர்ப்பதில் சத்தீஸ்கர் மாநிலம் ஆண்டுக்காண்டு வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த ஆண்டில் இம்மாநிலம் 420 சதவீத வளர்ச்சியை எட்டியது.
பஞ்சாப் மாநிலம் (184 சதவீதம்), கர்நாடகம் (166 சதவீதம்), இமாசலப் பிரதேசம் (108 சதவீதம்), அசாம் (25 சதவீதம்) வளர்ச்சியை எட்டியுள்ளன. இதேபோல மகாராஷ்டிரம் (8.9 சதவீதம்), குஜராத் (8.8 சதவீதம்), ஒடிசா (5.9 சதவீதம்), கர்நாடகம் (166 சதவீதம்), ஆந்திரப் பிரதேசம் (5.1 சதவீதம்) அளவுக்கு முதலீடுகள் வளர்ந்துள்ளது.
மத்தியப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் முதலீடுகளின் அளவு குறைந்துள்ளது. சேவைத் துறை, கட்டுமான மேம்பாடு, தொலைத் தொடர்புத் துறை, கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர், ஹார்ட்வேர், மருந்துப் பொருள் தயாரிப்பு, ஆட்டோமொபைல், ரசாயனம் உரம் அல்லாத பிற தொழில்கள்), மின் உற்பத்தி, உலோகத்துறை, ஹோட்டல் மற்றும் சுற்றுலா ஆகிய துறை களில் அந்நிய நேரடி முதலீடுகள் வந்துள்ளன.
அந்நிய முதலீடுகளை ஈர்ப்பததில் மொரீஷியஸ், சிங்கப்பூர், இங்கிலாந்து, ஜப்பான், நெதர்லாந்து, அமெரிக்கா, சைப், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து ஆகியன முன்னணியில் உள்ளன என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.