

ஒவ்வொரு வருடமும் காலாண்டு முடிவுகளை முன்னதாக அறிவிக் கும் நிறுவனம் இன்போசிஸ். டிசம்பர் காலாண்டு முடிவு கள் வரும் ஜனவரி 9-ம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதன் பிறகு பத்திரிகையாளர்களுக்கு வந்த செய்தியில் மாலை நான்கு மணிக்கு வெளியாகும் என்று குறிப் பிடப்பட்டிருக்கிறது. அதாவது பங்குச்சந்தை வர்த்தகம் முடிந்த பிறகு காலாண்டு முடிவுகளை வெளியிட இன்போசிஸ் திட்டமிட் டிருக்கிறது. இன்னொரு முக்கிய ஐடி நிறுவ னமான விப்ரோவும் காலாண்டு முடிவுகளை பங்குச் சந்தை வர்த்தகம் முடிந்த பிறகு வெளியிடுவதையே வழக்கமாக வைத்திருக்கிறது.
பங்குச்சந்தை வர்த்தகம் நடக்கும் போது, முடிவுகள் அறிவிக்கப்படும் பட்சத்தில், பங்கு விலையில் அதிக ஏற்றங்கள் நடக்கலாம். ஒரு வேளை சந்தை எதிர்பார்ப்புக்கு ஏற்ப முடிவுகள் வரவில்லை என்றால் அதிகமாக கூட இன்போ சிஸ் பங்குகள் சரியலாம். இதனால் வர்த்தகம் முடிந்த பிறகு முடிவு களை அறிவிக்க இருக்கிறது இன்போசிஸ்.
இன்போசிஸ் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா கடந்த ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். செப்டம்பர் காலாண்டு முடிவுகளை அவர் வெளியிட்டாலும், அவர் முழுமையாக பணிபுரிந்தது டிசம்பர் காலாண்டு என்பதால் அவர் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.