கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் கார்ப்பரேஷன் வங்கி

கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் கார்ப்பரேஷன் வங்கி
Updated on
1 min read

கார்ப்பரேஷன் வங்கி ரூ.500 கோடிக்கு கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டுகிறது. வங்கி விரிவாக்க நடவடிக்கைகளுக்காக இந்த நிதி திரட்டல் என்று கார்ப்பரேஷன் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த கடன் பத்திரங்கள் முழு வதும் மாற்றிக்கொள்ள முடியாத கடன் பத்திரமாகவும் இருக்கும் என்றும், வங்கிகளுக்கான அதிகரிக்கப்பட்ட மூலதனத்தை திரட்ட இந்த பத்திரங்கள் வெளியிடப்படுகிறது எனவும் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது சில நிலைமைகளில் ரிசர்வ் வங்கி ஒப்புதலுடன் எதிர்காலத்தில் பொதுவாக சந்தை சார்ந்த முதலீடாக மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது எனவும் தெரிகிறது.

பிப்ரவரி 5-ம் தேதி வரை இந்த பத்திரங்களில் முதலீடு செய்யலாம். பிப்ரவரி 06-ம் தேதி முதல் பத்திரங்கள் விநியோகம் செய்யப்படும்.

இந்த பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் கார்ப்பரேஷன் வங்கி பட்டியலிட்டுள்ளது. கார்ப்பரேஷன் வங்கி சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவினருக்கு சிறப்பான சேவை புரிந்ததற்காக மத்திய சிறு குறு நடுத்தர தொழில்கள் அமைச்சகத்திடம் இருந்து சிறந்த வங்கியாளர் விருதையும் பெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in