Published : 05 Jan 2015 12:07 PM
Last Updated : 05 Jan 2015 12:07 PM

தொய்வின்றி தொடரும் சீர்திருத்தம்: 6.5% வளர்ச்சியை நோக்கி இந்திய பொருளாதாரம்

அரசாங்கம் எடுத்துவரும் தொடர் சீர்திருத்தங்களால் இந்தியா 6.5 சதவீத வளர்ச்சியை நோக்கி செல்கிறது என்று சர்வதேச தர ஆய்வு நிறுவனமான மார்கன் ஸ்டான்லி தெரிவித்திருக்கிறது.

சமீபத்தில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் நம்பிக்கையை அதிகரிக்கின்றன. சீர்திருத் தங்களில் மட்டுமல்லாமல் அதை செயல்படுத்துவதிலும் கூட அரசு வேகமாக இயங்கி வருகிறது என்று மார்கன் ஸ்டான்லி அறிக்கை தெரிவிக்கிறது.

இதனால் உற்பத்தி அதிகரிக்க ஆரம்பித்து 6.5 சதவீத வளர்ச்சியை நோக்கி இந்தியா நடைபோடு வதாக மார்கன் ஸ்டான்லியின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் சேத்தன் அயா தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக் கிறார்.

கடந்த 25 வருடங்களாக இந்தி யாவின் வளர்ச்சி சராசரியாக ஆண்டுக்கு 6.5 சதவீத அளவில் இருந்தது. கடந்த இரண்டு வருடங்களாக 5 சதவீதத்துக்கும் கீழ் வளர்ச்சி இருந்தது. இதற்கு பணவீக்கமே காரணமாகும்.

ஜிடிபி வளர்ச்சியை 6.5 சதவீதத்துக்கு மேல் உயர்த்த வேண்டும் என்றால், அரசு பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது.

குறிப்பாக நிலம், வரி, மற்றும் தொழிலாளர் விஷயங்களில் சீர்த்திருத்தம் செய்ய வேண்டி இருக்கிறது.

இவற்றிலும் கவனம் செலுத்து வதால் பிஸினஸ் செய்வதற்கான சூழலை உருவாக்கி இருப்பதாக மார்கன் ஸ்டான்லியின் அறிக்கை தெரிவிக்கிறது.

காப்பீடு துறையில் அந்நிய முதலீடு மற்றும் நிலக்கரித்துறை திருத்த மசோதாவுக்கு அவசர சட்டம் இயற்றி இருக்கிறது.

அவசர சட்டம் பிறப்பித் திருப்பதன் மூலம், அரசாங்கம் தனது நிலைமையில் உறுதிப் பாட்டுடன் இருப்பதை காட்டு கிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசுக்கு மக்கள வையில் பெரும்பான்மை இருக் கிறது. அதனால் இந்த சீர்திருத்த மசோதாக்கள் அங்கு நிறைவேறுகின்றன.

ஆனால் மாநிலங்களவையில் போதுமான பலம் இல்லாததால் அங்கு தோல்வியடைந்து விடுகின் றன.

ஒருவேளை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலும் இந்த மசோ தாக்கள் நிறைவேற்றப்படா விட்டால், அரசாங்கம் நாடாளு மன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டம் நடத்தி உடனடியாக இந்த மசோதாக்களை நிறை வேற்ற வேண்டும் என்று மார்கன் ஸ்டான்லி தெரிவித்திருக் கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x