Published : 20 Jan 2015 10:33 AM
Last Updated : 20 Jan 2015 10:33 AM

ஆரோக்கியசுவாமி பால்ராஜ் - இவரைத் தெரியுமா?

$ அமெரிக்க வாழ் இந்தியர். இப்போது ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் மின் துறையில் வருகை பேராசிரியராக உள்ளார்.

$ கோவையை அடுத்த பொள்ளாச்சியைச் சேர்ந்தவர். 15 வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். 30 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய இவர் கடற்படை பொறியியல் கல்லூரியில் மின்துறையில் பொறியியல் பட்டம் பெற்றார். பின்னர் டெல்லியில் உள்ள ஐஐஎம்-மில் மின் பொறியியலில் டாக்டர் பட்டம் பெற்றார்.

$ கம்பியில்லா தகவல் தொழில்நுட்பத்தின் (வயர்லெஸ்) முன்னோடி என்று அழைக்கப்படுபவர். இப்போது பயன்படுத்தப்படும் வைஃபை மற்றும் எல்டிஇ தொழில்நுட்பத்துக்கு அடிப்படையே வயர்லெஸ் நுட்பம்தான்.

$ 1991-ம் ஆண்டு வரை இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த இவர், பல்வேறு தகவல் தொழில்நுட்பங்களை ராணுவத்துக்காக உருவாக்கித் தந்துள்ளார்.

$ செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோ மையத்தை (சிஏஐஆர்) இந்தியாவில் உருவாக்கிய பெருமை இவரையே சாரும். இதே போல சி-டாக் மற்றும் சிஆர்எல் ஆகிய தொழில்நுட்ப மையங்கள் உருவாகக் காரணமானவரும் இவரே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x