Last Updated : 01 Jan, 2015 12:08 PM

 

Published : 01 Jan 2015 12:08 PM
Last Updated : 01 Jan 2015 12:08 PM

தலைவர், நிர்வாக இயக்குநர் பதவிகள் தனித்தனியாக பிரிப்பு: நான்கு பொதுத்துறை வங்கிகளுக்கு நிர்வாக இயக்குநர் நியமனம்

பொதுத்துறை வங்கிகளில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிகளை தனித் தனியாக பிரித்து இரண்டு பதவி களாக மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது. அதனால் இனி பொதுத்துறை வங்கிகளில் தலைவர் பதவியை ஒருவரும், நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பணியை வேறு ஒருவரும் கவனிப்பார்கள்.

இதில் அன்றாட வங்கி நிர்வாக பணியை நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி கவனிப்பார். தலைவர் தினசரி பணிகளில் ஈடுபட மாட்டார்.

அதே சமயத்தில் வங்கியின் இயக்குநர் குழுவில் இருப்பார். மேலும் குழுவை வழி நடத்துவது தலைவரின் பணியாகும். பொதுத்துறை வங்கிகளின் தலைவர் பதவிகளுக்கான

தேர்வு முறை கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று நிதி அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

நிர்வாக இயக்குநர் நியமனம்

இதுதவிர நான்கு பொதுத்துறை வங்கிகளுக்கு நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிகளை மத்திய அரசு நியமித்திருக்கிறது.

பேங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஆர்.கோடீஸ்வரன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியின் செயல் இயக்குநர் கிஷோர் குமார் சான்ஸி, விஜயா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பேங்க் ஆப் இந்தியாவின் செயல் இயக்குநர் அனிமேஷ் சவுகான் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதி காரியாக நியமிக்கப்பட்டிருக் கிறார். பேங்க் ஆப் பரோடா வின் செயல் இயக்குநர் பி.னிவாஸ் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி யாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த பதவியில் நியமிக் கப்பட்டு மூன்று ஆண்டுகள் அல்லது இவரது ஓய்வுக்காலம் (superannuation) வரை பதவியில் இருக்கலாம். அதே சமயத்தில் இந்த விதிகள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு பொருந்தாது.

தற்போது தலைவர் மற்றும் சில நிர்வாக இயக்குநர்கள் என்ற அடிப்படையில் எஸ்.பி.ஐ. செயல்பட்டு வருகிறது, இது தொடரும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்திருகிறது.

சிண்டிகேட் வங்கியின் தலைவ ராக இருந்த எஸ்.கே.ஜெயின் லஞ்ச வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த வங்கியின் தலைவர் பதவிக்கு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் தலைவர் நியமனம் செய்யப்படும் என்று நிதி அமைச்சம் தெரிவித்தது.

அதே சமயத்தில் முக்கிய பொதுத்துறை வங்கிகளான பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் கனரா வங்கிக்கு இன்னும் தலைவர்கள் நியமனம் செய்யப்படவில்லை.

இதற்காக மீண்டும் ஒரு முறை நேர்காணல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. இதில் தனியார் வங்கிகளை சேர்ந்தவர்களையும் நியமிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்ப தாக தெரிகிறது.

இதற்கான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

தனியார் வங்கிகளில் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பதவிகள் தனித்தனியாக இருக்கின்றன.

2004-05ம் ஆண்டில் ரிசர்வ் வங்கி ஏ.எஸ்.கங்குலி தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தது. அந்த கமிட்டியின் பரிந்துரைபடி இந்த இரண்டு பதவிகளையும் பிரிக்கலாம் என்று பரிந்துரை செய்யப் பட்டது. தனியார் வங்கிகள் 2007-ம் ஆண்டு இந்த பரிந்துரையை செய்தன.

பொதுத்துறை வங்கிகளில் இப்போதுதான் இந்த பதவி தனி யாக பிரிக்கப்படுகின்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x