Published : 07 Jan 2015 11:31 AM
Last Updated : 07 Jan 2015 11:31 AM

சிறந்த தொழிலதிபராக கூகுள் நிறுவனத்தின் லாரி பேஜ் தேர்வு

கூகுள் நிறுவனத்தின் நிறுவனர் களில் ஒருவரான லாரி பேஜ், 2014-ம் ஆண்டின் சிறந்த தொழிலதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆன் லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனர் ஜாக் மா மற்றும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் ஆகியோரை பின்னுக் குத் தள்ளி இவர் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக பார்ச்சூன் இதழ் குறிப்பிட்டுள்ளது.

நிறுவனத்தின் செயல்பாடு, தலைமைப் பண்பு, ஸ்டைல், பங்கு தாரர்களுக்கு அளிக்கும் ஈவுத் தொகை ஆகியவற்றின் அடிப்படை யில் முன்னணியில் உள்ள 20 நிறுவனத் தலைவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அப்பட்டியலில் முதலிடத்தை லாரி பேஜ் பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் ஆப்பிள் நிறு வனத்தின் டிம் குக், ஃபாஸ்ட் ஃபுட் சங்கிலித் தொடர் நிறுவனமான சிபோட்லேயின் இணை தலை மைச் செயல் அதிகாரிகள் மோன் டோக்மெரி மோரன், ஸ்டீவ் எலிஸ், ஃபெடெக்ஸ் தலைவர் பிரெட் ஸ்மித் ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.

இந்தப் பட்டியலில் 5 பெண் களும் இடம்பெற்றுள்ளனர். 2012-ம் ஆண்டு இந்தப் பட்டி யலில் முதலிடத்தைப் பிடித்த அமேசான் நிறுவனத் தலைவர் ஜெஃப் பிஸோஸ் இம்முறை 20 பேர் பட்டியலில்கூட இடம்பெற வில்லை.

கூகுள் நிறுவனம் தொடர்ந்து ஆராய்ச்சி, அபிவிருத்திப் பணி களில் ஈடுபட்டுள்ளதோடு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப் படுத்துவது, பலூன் மூலம் அலைக்கற்றை வசதி ஏற்படுத்து வது உள்ளிட்ட எதிர்கால ஆராய்ச்சி யிலும் ஈடுபட்டு வருவதை பார்ச்சூன் இதழ் சுட்டிக் காட்டியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் குறிப்பிடத் தக்க வளர்ச்சியை எட்டுவதற்கு பேஜ் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுல்ளது.

மகளிர் பிரிவில் அல்ட்ரா பியூட்டி நிறுவன தலைமைச் செயல் அதிகாரி மேரி திலோன், ஐடிடி சிஇஓ டெனிஸ் ரமோஸ், டிஜேஎக்ஸ் சிஇஓ காரோல் மெரி யோட்விஜ், தெரனோஸ் நிறுவனர் எலிசபெத் ஹோம்ஸ் மற்றும் வில்லியம்ஸ் சோனோமா தலைவர் லாரா ஆல்பெர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கை அடிப்படையிலும், நிறுவன பங்குகளின் செயல்பாடு, பங்குதாரர்களுக்குக் கிடைத்த வருமானம், வர்த்தகத்தில் அவர் களது ஆதிக்கம், தலைமைப் பண்பு, உத்திகள் வகுப்பது, வளர்ச்சிக் கான திட்டங்களை வகுப்பது உள்ளிட்டவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x