

தங்களுடைய கார்ப்பரேட் வாழ்க்கையில் மாணவர்கள் முன்னேற வேண்டும் என்றால் மாற்றங்களை உடனுக்குடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும் என்று பிளிப்கார்ட் நிறுவனத்தின் மனிதவளப்பிரிவு தலைவர் மெகின் மகேஷ்வரி தெரிவித்தார்.
பெங்களூரு சி.எம்.ஆர். தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய வேலை உத்திரவாத பயிற்சி முகாமில் இவ்வாறு தெரிவித்தார்.
தொழில்நுட்பம் வேகமாக மாறிவரும் போது கற்றுக்கொள் வதை நிறுத்தக்கூடாது. தொடர்ந்து கற்றுக்கொண்டுவந்தால் மட்டுமே மாறிவரும் வர்த்தக சூழ்நிலையின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியும் என்றார்.
கற்றுக்கொள்ளுதல் எவ்வளவு முக்கியம் என்று பல உதாரணங் களை கொண்டு அவர் விளக்கினார். கடந்த ஐந்து வருடங்களில் மொபைல் போன்களில் பயன் படுத்தப்படும் இயங்கு செயலியான (operating system) ஆன்ட்ராய்டு வேகமாக வளர்ந்து வந்திருக்கிறது. இது சிம்பியான் மற்றும் ஜாவா நிறுவனத்தில் இருந்து பெரும் பகுதியை பிடித்துவிட்டது. இப்போது எத்தனை நபர்கள் சிம்பியான் இயங்கு செயலியில் தங்களுடைய ஆய்வு பணிகளை செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதனால் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக வேண்டும் என்றார்.
இப்போது இருக்கும் தொழில் நுட்பம் இன்னும் ஐந்து வருடங் களுக்கு பிறகு பயன்படாமல் போகலாம். மேலும் வருங்காலத்தில் நாம் எதிர்பார்ப்பதைவிடவும் தொழில்நுட்ப மாற்றம் இருக்கும். இந்த மாற்றத்தால் வர்த்தகம் வேகமாக வளர்ந்துவிட்டது என்றார்.