

இந்தியாவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான ஸிப் டயல் நிறுவனத்தை ட்விட்டர் நிறுவனம் வாங்கியுள்ளது. பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸிப்டயல் நிறுவனம் செல்போன்களுக்கான ஒரு தளத்தை உருவாக்கியுள்ளது.
வாடிக்கையாளர்கள் எஸ்எம்எஸ், வாய்ஸ், மொபைல் இணையம் உள்ளிட்ட அனைத்தையும் இணைய இணைப்பில் இல்லாத போதும் மேற்கொள்ள முடியும். செல்போன்கள் மூலமான மேம்பட்ட சேவையை அளிக்கிறது.
இந்தியாவில் ட்விட்டர் நிறுவனம் மேற்கொள்ளும் முதலாவது கையகப்படுத்தல் நடவடிக்கை இதுவாகும்.