

லஷ்மி விலாஸ் வங்கியின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 4 மடங்கு உயர்ந்து 32.55 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 7.42 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே நிகரலாபம் இருந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 552.63 கோடி ரூபாயாக இருந்த வருமானம் இப்போது 635.36 கோடி ரூபாயாக இருக்கிறது.
கடந்த வருடம் இதே காலாண்டில் 5.6 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 3.4 சதவீதமாக குறைந்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 4.33 சதவீதத்திலிருந்து 2.37 சதவீதமாக குறைந்திருக்கிறது. வர்த்தகத்தின் முடிவில் இந்த பங்கு 52 வார உச்சபட்ச விலையை தொட்டிருந்தாலும், முடியும்போது 60 பைசா சரிந்து 89.30 ரூபாயில் முடிவடைந்தது.