ரயில்வே வருமானம் 12.57% அதிகரிப்பு

ரயில்வே வருமானம் 12.57% அதிகரிப்பு
Updated on
1 min read

ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்திய ரயில்வேயின் வருமானம் 12.57 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில் ரூ. 1,14,656 கோடி வருமானம் ஈட்டியுள்ளது என்றும் இது முந்தைய இதே காலகட்டத்தில் ரூ.1,01,856 கோடியாக இருந்தது என்றும் கூறியுள்ளது.

சரக்கு ரயில் போக்குவரத்து 12.19 சதவீதம் உயர்ந்துள்ளது. மொத்த வருவாயில் ரூ.77,161 கோடி வருமானம் சரக்கு போக்குவரத்து மூலம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் சரக்கு போக்குவரத்து வருவாய் ரூ. 68,776 கோடியாக இருந்தது. பயணிகள் ரயில் போக்குவரத்து 15.59 சதவீதம் உயர்ந்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in