

இந்திய பங்குச்சந்தைகள் நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் ஒரு சதவீதம் உயர்ந்து முடிந்தன. மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. வங்கித்துறை நிறைய மாற்றங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பினாலும் உற்பத்தித் துறையில் இரண்டு வருடங்களில் இல்லாத அளவுக்கு ஏற்றம் இருப்பதாலும் இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்தன.
தொடர்ந்து ஆறாவது வர்த்தக தினமாக பங்குச் சந்தைகள் உயர்ந்து முடிந்தன. சென்செக்ஸ் 380 புள்ளிகள் உயர்ந்து 27887 புள்ளியிலும், நிப்டி 111 புள்ளிகள் உயர்ந்து 8395 புள்ளிகளும் முடிந்தன. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் உயர்ந்து முடிவடைந்தன. அனைத்துத் துறை குறியீடுகளும் உயர்ந்து முடிந்தன. குறிப்பாக வங்கி, கேபிடல் குட்ஸ், ஐடி மற்றும் பவர் குறியீடுகள் உயர்ந்து முடிந்தன. சென்செக்ஸ் பங்குகளில் ஹெச்.டி.எப்.சி.
டாடா மோட்டார்ஸ், பி.ஹெச்.இ.எல்., ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் ஆக்ஸிஸ் வங்கி ஆகியவை உயர்ந்து முடிந்தன. மாறாக எம் அண்ட் எம், ரிலையன்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோ கார்ப் மற்றும் ஹெச்.யூ.எல். ஆகிய பங்குகள் சரிந்து முடிவடைந்தன.