விவசாயத்தில் நீண்ட கால முதலீடு தேவை: அருண் ஜேட்லி

விவசாயத்தில் நீண்ட கால முதலீடு தேவை: அருண் ஜேட்லி
Updated on
1 min read

நாட்டின் எதிர்கால உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டுமெனில் விவசாயத் துறையில் நீண்ட கால முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

இது தொடர்பாக நேற்று பேசிய நிதி அமைச்சர் கிராமப்புற நிதித் தேவைகள் குறித்து நபார்டு வங்கி தொடர்ச்சியாக அடையாளம் காணும் வேலைகளை செய்ய வேண்டும் என்றார். கிராமப்புறம் மற்றும் விவசாயத் துறையின் வளர்ச்சியை பொறுத்துதான் வங்கியின் பொருளாதார வளர்ச்சி அமைகிறது என்று குறிப்பிட்டார். நபார்டு வங்கியின் இயக்குநர் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட ஜேட்லி இதைக் குறிப்பிட்டார்.

மறு நிதியாக்கத்தின் மூலம் ரூ.3000 கோடியை கிராமப்புற வீட்டுத் தேவைகளுக்கு உதவும் விதமாக ஒதுக்கியதை நிதியமைச்சர் பாரட்டினார். இந்த துறையில் தொடர்ந்து முன்னணி வங்கியாக செயல்பட வேண்டும் என்று ஆலோசனை கூறிய அருண் ஜேட்லி சிறு மற்றும் குறு விவசாயிகள் யார் அவர்களுக்கான தேவைகள் என்ன என்பது குறித்து தற்போது வரை தெளிவான வரையறைகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். வருகிற பட்ஜெட்டில் ரூ.5,000 கோடி காப்புத்தொகை ஒதுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in