சிட்டி யூனியன் வங்கி நிகர லாபம் 15% உயர்வு

சிட்டி யூனியன் வங்கி  நிகர லாபம் 15% உயர்வு
Updated on
1 min read

சிட்டி யூனியன் வங்கி டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் ரூ. 102.70 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. நேற்று சிட்டி யூனியன் வங்கியின் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த மூன்றாவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் வங்கியின் நிகர லாபம் ரூ.89.09 கோடியாக இருந்தது என வங்கியின் தலைவர் என். காமகோடி தெரிவித்தார்.

வங்கியின் செயல்பாட்டு லாபம் 25 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், வங்கியின் மொத்த வளர்ச்சி 44 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். வங்கியின் சொத்துக்களை மறுசீரமைப்பு செய்தது இந்த வளர்ச்சிக்கு தூண்டுதலாக இருந்தது என்றும் காமகோடி குறிப்பிட்டார்.

டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் வங்கியின் மொத்த மதிப்பு ரூ.40,171 கோடியாக இருப்பதாகவும், டெபாசிட் மதிப்பு 10 சதவீதம் அதிகரித்து ரூ.23,203 கோடியாக உள்ளதாகவும் கூறி னார். கடந்த வருடத்தில் டெபாசிட்டு களின் மதிப்பு ரூ.21,116 கோடியாக இருந்தது என்றும் கூறினார்.

வங்கி கடந்த காலாண்டில் ரூ.37 கோடி திரும்ப பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டில் ரூ.59 கோடியாக இருந்தது. ரியல் எஸ்டேட் சந்தை தேக்கமாக இருப்பதால் பணத்திருப்பம் குறைவாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in