Published : 15 Jan 2015 12:01 PM
Last Updated : 15 Jan 2015 12:01 PM

அன்ஷு ஜெயின் - இவரைத் தெரியுமா?

$ டாயிஷ் வங்கியின் இணை தலைமைச் செயல் அதிகாரிகளில் இவரும் ஒருவர். சர்வதேச அளவில் வங்கியின் நிதிச் செயல்பாடு, வங்கி வர்த்தகம் உள்ளிட்டவற்றைக் கவனித்து வருகிறார்.

$ வங்கியின் இயக்குநர் குழுமத்தில் இணைத் தலைவராக 2012-ம் ஆண்டு முதல் செயல்படுகிறார்.

$ ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த இவர் டெல்லியில் உள்ள ராம் வணிகக் கல்லூரியில் பொருளாதாரம் படித்தார். மாசசூசெட்ஸ் பல்கலைக் கழகத்தில் நிதி நிர்வாகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

$ பியோபாடி அண்ட் கோ நிறுவனத்தில் நிதி பகுப்பாளராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு நியூயார்க்கில் உள்ள மெரில் லிஞ்ச் நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.

$ 1995ம் ஆண்டு டாயிஷ் வங்கியில் வர்த்தகத்துறையில் நுழைந்த இவர் அதிலிருந்து படிப்படியாக உயர்ந்தார். இந்த வங்கியில் ஹெட்ஜ் நிதிக்கென சிறப்புப் பிரிவு உருவாக்குவதற்கு முக்கிய காரணமாயிருந்தவர் இவரே.

$ ஜெர்மனியின் வர்த்தக வங்கியாக இருந்ததை, சர்வதேச அளவில் பிரபலமான வங்கியாக வளர்த்ததில் இவரது பங்களிப்பு மிக அதிகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x